தென்னிந்திய ஹீரோக்களை மிஞ்சும் அளவிற்கு உச்சத்தை தொடும் தளபதி.. ரஜினிக்கு பயத்தை காட்டிய சம்பளம் 

vijay-rajini
vijay-rajini

Vijay : பொதுவாகவே பெரிய நடிகர்களின் மதிப்பு அவர்கள் படங்கள் செய்யும் வசூலை பொருத்து தான் அமையும். கடந்த சில வருடங்களாகவே விஜய் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார். இதனால் படத்திற்கு படம் அவரது சம்பளம் அதிகமாகி கொண்டு போகிறது. 

அந்த வகையில் இப்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். டிடிவி என்டர்டைமென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். 

விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படும் இப்படம் அரசியல் கதையில் உருவாகுவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் விஜய் அரசியலில் இறங்கி உள்ளதால் அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் இந்த படமும் இருக்கப் போகிறது.

விஜய்யின் சம்பளம் 250 கோடி

தளபதி 69 படத்தில் விஜய்யின் சம்பளம் 250 கோடி. இதற்கு முன்னதாக நடித்த கோட் படத்தில் 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். லியோ படத்துக்கு 150 கோடிக்கு மேல் கொடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடிக்கு மேல் விஜய்யின் சம்பளம் உயர்ந்திருக்கிறது. 

விஜய்க்கு அடுத்தபடியாக ரஜினி அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில் அவருக்கே பயத்தை காட்டியுள்ளார் தளபதி. ஏனென்றால் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது அளவுக்கு விஜய்யின் சம்பளம் மற்றும் மார்க்கெட் உயர்ந்து நிற்கிறது. 

அதேபோல் அஜித்தும் இப்போது தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார். அந்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள குட் பேட் அக்லி படத்தில் அவரது சம்பளம் 163 கோடி ஆகும். 

Advertisement Amazon Prime Banner