வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் அறிமுகப்படுத்திய 7 இயக்குனர்கள்.. அதுல ஒருத்தர் தளபதிக்கே நடனம் கத்து கொடுத்தவர்

தமிழ் சினிமாவில் தற்போது வசூல் மன்னனாக வலம் வந்து  கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இவரை வைத்து முதல் முறையாக இயக்கி வெற்றி தோல்விகளை சந்தித்த இயக்குனர்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

ரமணா: 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திருமலை திரைப்படம் ரமணாவின் இயக்கத்திலும், திரைக்கதையிலும் விஜய் முதன்மை கதாபாத்திரமாக நடித்த திரைப்படம். இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் கௌரி என்ற பெயரில் திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். கௌசல்யா, ரகுவரன், விவேக், அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்.

கே.செல்வபாரதி: 1998 ஆம் ஆண்டு வெளிவந்த நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் விஜய், ரம்பா மற்றும் தேவயானி முக்கிய கதாபாத்திரங்களிலும் மணிவண்ணன், சார்லி, செந்தில், வினுசக்கரவர்த்தி, சுந்தரராஜன் ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் செல்வபாரதி இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை தேவா.

பாலசேகரன்: விஜய், சுபலட்சுமி, மந்த்ரா, ரகுவரன், கரன் ஆகியோர் நடிப்பில் 1997ல் வெளிவந்த லவ்டுடே திரைப்படத்தை பாலசேகரன் இயக்கியிருந்தார். தெலுங்கில் இப்படம் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

எழில்: 1999 இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தை எழில் இயக்கி இருந்தார்.விஜய், சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் இசை எஸ் ஏ ராஜ்குமார், படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெற்றிப் பாடல்களாக அமைந்தன. இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

பேரரசு: 2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இப்படத்தில் விஜய், திரிஷா, மல்லிகா, கோட்டா சீனிவாசராவ், மனோஜ் கே ஜெயன், பசுபதி, வையாபுரி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் 2004 இல் வெளியான கில்லி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

பிரபுதேவா: 2007 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். விஜய் ,அசின், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் பொங்கலன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசை மணிஷர்மா, பூரி ஜெகன்நாத்.

vijay-prabhudeva
vijay-prabhudeva

பாபுசிவன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய், அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பு டிசம்பர் 2009 ஆம் ஆண்டு பாபு சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டைக்காரன்.இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். இப்படத்தில் தேவராஜ் போன்ற ஒரு பெரிய போலீஸ் ஆக வேண்டும் என ரவி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து இருந்தார்.

- Advertisement -

Trending News