ரஜினியின் தீவிர ரசிகன் என நிரூபித்த விஜய்.. சிவகார்த்திகேயன் கொஞ்சம் பின்னாடி போப்பா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே போல் தமிழ் சினிமாவிலும் பல ஹீரோக்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். மேலும் சிலர் ரஜினியை ரோல் மாடலாக நினைத்த தான் சினிமாவில் நுழைந்துள்ளனர். அதிலும் சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

சின்ன வயதில் இருந்தே ரஜினி படத்தைப் பார்த்தே வளர்ந்தேன் என சிவகார்த்திகேயன் பல மேடைகளில் கூறியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தின் டைட்டில் கூட ரஜினி முருகன் என வைவைத்திருந்தார். ரஜினி நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தவறாமல் சிவகார்த்திகேயன் பார்த்துவிடுவாராம்.

மேலும், அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் வெளியாகியிருந்தது. அப்போது சிவகார்த்திகேயன் உட்பட டான் படக்குழு அனைவரையும் ரஜினிகாந்த் தன் வீட்டுக்கு அழைத்து பேசியதாக டான் சக்சஸ் மீட்டிங்கில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது சிவாஜி படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஸ்டுடியோ இப்படத்தை வெளியிட்டிருந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சிவாஜி படத்தை 15 முறை பார்த்ததாக தனது சமூக வலைத்தள பக்கத்தை பதிவிட்டிருந்தார். இவர்தான் இப்படி என்றால் தளபதி விஜய் சிவாஜி படம் வெளியானபோதே 17 முறை திரையரங்கில் பார்த்ததாக கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்றால் அவருக்கு ஒரு படி மேலாகவே விஜய் ரஜினியின் ரசிகராக உள்ளார். மேலும் தளபதி விஜய், ரஜினி மீது அளவுகடந்த மரியாதையும் வைத்துள்ளார். ஒரே துறையைச் சார்ந்தவர்கள் மத்தியில் போட்டிகள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அவர்கள் மீது தீவிர ரசிகராக இருப்பது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -