பட்டப் பகலில் சரக்கும் கையுமாக சிக்கிய விஜய் பட நடிகர்.. நடுரோட்டில் தகராறு செய்த இலியானா ஃபியான்சி

Vijay Movie Actor Caught With Drink: சோசியல் மீடியா புழக்கம் அதிகமாகிவிட்ட நிலையில் உலகத்தின் மூலையில் ஒரு விஷயம் நடந்தால் கூட வைரலாகி விடுகிறது. இதனாலேயே திரை பிரபலங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ஆனால் ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என அலப்பறை கூட்டும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் நண்பன் படத்தில் இலியானாவின் ஃபியான்சி ரோலில் நடித்தவர் தான் கார்த்திக் சீனிவாசன். இந்த வாட்ச் என்ன விலை தெரியுமா? இந்த ஷூ என்ன விலை தெரியுமா? என விலைப்பட்டியலை கூறி அட்ராசிட்டி செய்திருப்பார்.

பல படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது பட்டப் பகலில் இவர் நடிகர் சாம்ஸ் உடன் சரக்கும் கையுமாக சிக்கி இருக்கிறார். பொதுவெளியில் இப்படி மது அருந்துகிறீர்களே என ஒரு இளைஞர் அவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பி அதை வீடியோவாகவும் எடுத்து இருக்கிறார்.

Also read: உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

உடனே இருவரும் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி அந்த போனை பிடுங்க முயற்சி செய்கின்றனர். மேலும் சாம்ஸ் நான் வீட்டில் குடிப்பேன், ரோட்டில் குடிப்பேன், நாட்டில் குடிப்பேன் என பேசி வம்பு செய்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அதிவேகமாக பரவி வருகிறது.

அது மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய இவர்கள் இப்படி குடித்துவிட்டு அராஜகம் செய்கிறார்களே என அவர்களுக்கு எதிரான கருத்துகளும் கிளம்பி கொண்டிருக்கிறது. இப்படியாக இந்த வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நிச்சயம் இது ஒரு பிராங்க் வீடியோவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பட்டப் பகலில் சரக்கும் கையுமாக சிக்கிய விஜய் பட நடிகர்

sams-karthik sreenivasan
sams-karthik sreenivasan

ஏனென்றால் இப்போதெல்லாம் ஒரு படத்தை பிரமோஷன் செய்யவும், சில யூடியூப் சேனல்களுக்கு கொடுக்கும் பேட்டிகளை வைரல் செய்யவும் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஷால் கூட ஒரு பெண்ணுடன் செல்லும் பிராங்க் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அப்படி ஒரு தந்திரமாக கூட இது இருக்கலாம்.

Also read: கூடவே நம்பி இருந்த இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிய விஜய்.. 69-வது படத்திற்கு ஹிட் இயக்குனருடன் இறங்கிய தளபதி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்