என் மகன் விஜய்யை ஹீரோவாக்க தெரிந்த எனக்கு இன்னொருவரை சூப்பர்ஸ்டார் ஆக்க முடியாதா என சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் எஸ்ஏசி. இது எங்கே போய் முடியுமோ என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
எஸ் ஏ சந்திரசேகருக்கு எப்படியாவது தன்னுடைய மகன் விஜய்யை முதலமைச்சராகி தானும் அந்த பதவியில் ஒரு சில காலம் அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் விஜய் சூழ்நிலை புரிந்து பொறுமையாக அரசியலில் நுழையலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அதற்குள் எஸ்ஏசிக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை போல. விஜய்யுடன் சண்டை அதை தொடர்ந்து விஜய்யை பொது மேடைகளில் தாக்கிப் பேசி வருகிறார். மேலும் விஜய்யை அசிங்கப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.
பதவி வெறி மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது பாருங்கள். இது ஒருபுறமிருக்க எஸ் ஏ சந்திரசேகர் அடுத்ததாக ஒரு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த படத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் கதிர் என்பவரை வைத்து இயக்க உள்ளாராம்.
மேலும் விஜய் ரேஞ்சுக்கு அவரை வளர்த்துவிட்ட போகிறேன் என சபதம் எடுத்துள்ளாராம் எஸ்ஏசி. ஏற்கனவே உன்னை விஜய்யாக மாற்றுகிறேன் என சமீபத்தில் நடிகர் ஜெய்யை வைத்து கேப்மாரி என்ற பிட்டு படத்தை வெளியிட்டார் எஸ் ஏ சந்திரசேகர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கதிருக்கு ஏற்கனவே இருக்கும் நல்ல பெயர் இவரால் கெட்டுவிடக் கூடாது என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். எஸ் ஏ சந்திரசேகரின் இந்த அவசர புத்தியால் இன்னும் எத்தனை பேர் வாழ்க்கையை இழக்க போகிறார்களோ தெரியவில்லை.