ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை இயக்கி ஹார்டிக் வெற்றியை கொடுத்தார். இதனால் அட்லி விஜய்யை தன்னுடைய உடன்பிறவாத அண்ணனாகவே பார்க்கிறார்.

இதே போல் தான் விஜய்யும் அட்லிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அட்லி, அந்த படத்தில் விஜய்யை கேமியோ ரோலில் நடிக்க கேட்டிருக்கிறார்.

Also Read: 2 ரிலீஸ் தேதிகளை அறிவித்த அட்லீ.. இந்த வருடம் காத்திருக்கும் டபுள் ட்ரீட்

இதற்கு விஜய்யும் சரி என்று சொன்ன பிறகு, தற்போது அட்லி அண்ணனை தூக்கி விட்டு டோலிவுட் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார். ஏனென்றால் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் விஜய்க்கு ஜவான் படத்தில் நடிப்பதற்கு நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். அதனால் தான் அட்லி, ஜவான் படத்தில் விஜய் நடிக்க இருந்த கேரக்டரை அல்லு அர்ஜுனை வைத்து முடித்து விடலாம் என்று முடிவில் இருக்கிறார்.

Also Read: கணக்கு வழக்கை பார்த்து காண்டான ஷாருக்கான்.. பயத்தில் மாமியார் வீட்டுக்கு திரும்பி வந்த அட்லீ

விரைவில் அல்லு அர்ஜுனும் ஜவான் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜவான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஜூன் 2 தேதி ஜவான் ரிலீஸ் ஆகிறது. எனவே இந்த படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கவில்லை, அல்லு அர்ஜுன் தான் அவருக்கு பதிலாய் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: லியோவை ஓவர் டேக் செய்ய வரும் தளபதி 69.. 900 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் டீம்

Next Story

- Advertisement -