30 வருட தடைகளை உடைத்தெறிந்த தளபதி.. அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டிய விஜய், பிறந்தநாள் ஸ்பெஷல்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இன்று தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி, தளபதி விஜய் அவர்களின் பிறந்த தினம். பல தடைகளை தாண்டி அவர் இன்று முன்னேறி இருக்கிறார். அவரைப்பற்றிய சிறப்பு கண்ணோட்டமாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தளபதி விஜய் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் ஆரம்ப காலங்களில் தலை காட்டியுள்ளார். ஆனபோதும் தந்த எஸ்.ஏ.சி அவரை கதாநாயகனாக அறிமுகம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே அவரை பல திறமைகளை கற்றுக்கொள்ள வைத்தார். விஸ்காம் படிப்பில் படு சுட்டியான விஜய், நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகன் ஆனார். தந்தை இயக்குனர் என்ற காரணத்தால் அவருக்கு வாய்ப்பு வேண்டுமானால் எளிதாக கிடைத்திருக்கலாம், ஆனால் அதை உரியவகையில் பயன்படுத்தவும், தக்க வைக்கவும் தனியான ஒரு திறமை வேண்டும். அதனை தளபதி அவர்கள் வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் தந்தையின் நிழலிலேயே வளர்ந்த விஜய் பெரும்பாலும் யாருடனும் அதிகம் பேசாமலும், வெளிப்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்யாமலும் இருந்தார். அந்த நேரத்தில் அவரை வெளிப்படையாகவே பலர் இவரெல்லாம் ஹீரோவா, ஹீரோவுக்கு உண்டான முகம் இல்லை என்றெல்லாம் காது பட பேசியுள்ளனர். அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை அவர். தொடர்ந்து தந்தையின் இயக்கத்தில் பல படங்கள் நடித்தாலும் அவருக்கு என்று சொல்லிக்கொள்ளும்படி ஒரு பிரேக் கிடைக்கவில்லை. அதன் காரணமாக பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருந்தார். அவருக்கு முதல் திருப்புமுனையை கொடுத்த படம் இயக்குனர் விக்ரமன் மூலமாக வந்தது.

இயக்குனர் விக்ரமன் அப்போது தான் புகழ் பெற தொடங்கி இருந்தார். அவர் எடுக்கும் குடும்பத்து காதல் கதைகளும், நகைச்சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் கவனிக்கப்பட்டது. விஜய் அவர்களுடன் இணைந்து 1996ஆம் வருடம் பூவே உனக்காக என்ற அருமையான காதல் கதையை படமாக்கினர். அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. விஜய்க்கு என்று பெரிய அங்கீகாரம் கிடைத்தது. மேலும் அவருக்கு நகைச்சுவை வேடமும் பொருந்தும் என்று நிரூபித்தார்.

1997-ஆம் வருடம் விஜய்க்கு இன்னும் சிறப்பாக அமைந்தது. அந்த வருடத்தின் இரண்டு சிறந்த படங்களான, லவ் டுடே, மற்றும் காதலுக்கு மரியாதை அவரது நடிப்பில் வெளியானது. அதிலும் காதலுக்கு மரியாதை சூப்பர் டூப்பர் ஹிட். திரும்பிய பக்கமெல்லாம் அந்த படத்தின் பாடல்கள் ஒலித்தன. படம் 200 நாட்கள் கடந்து வெற்றிநடை போட்டது. விஜய்க்கு என்று ரசிகர் கூட்டம் பெரிதாக உருவானது இந்த படத்திற்கு பிறகு தான். விஜய் ஷாலினி ஜோடியும் மிகவும் பேசப்பட்டது.

1998ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நிலாவே வா, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் என்று மூன்று படங்கள் வெளியானது. அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றன. மூன்று படங்களும் பாடல்களுக்கவும், விஜயின் நடனத்திற்காகவும் அதிகம் பேசப்பட்டது. அடுத்த வருடம் அவருடைய ஆல் டைம் பெஸ்ட் என சொல்லப்படும் துள்ளாத மனமும் துள்ளும் படம் வந்தது. விஜய் சிம்ரன் காம்போ ட்ரெண்டிங் ஆனது. படம் 250 நாட்கள் ஓடியது.

இப்படி வெற்றியை மட்டுமே சுவைத்துக்கொண்டு இருந்த விஜய்க்கு தொடர்ந்து சில படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக அவர் மிகவும் எதிர்பார்த்த நெஞ்சினிலே, மின்சார கண்ணா படங்கள் சொதப்பின. அப்போது பல பத்திரிக்கைகள், அவரது சினிமா வாழ்க்கை ஏற குறைய முடிந்துவிட்டது என்று கூட அபாண்டமான எழுதின. ஆனால் தளபதி அதை எல்லாம் அடுத்த வருடமே தகர்த்து எறிந்தார். 2000-ஆம் ஆண்டு வெளியான குஷி, ப்ரியமானவளே, 2001-ஆம் ஆண்டு வந்த பிரெண்ட்ஸ், பத்ரி போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன.

தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவந்த விஜய், திருமலை படம் மூலமாக தனது ரூட்டை மாற்றினார். இந்த படத்தில் ஆக்சன் அவதாரம் எடுத்தார் விஜய். இந்த படத்தின் மூலம் அவர் தனது ரசிகர் வட்டத்தை பெரிது படுத்தினார் என்பதே உண்மை. இந்த படத்தில் மெக்கானிக்காக சிறப்பாக நடித்திருப்பார். மேலும் இந்த படம் அவர் கடைநிலை ரசிகன் வரை கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல. 2004-ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் தமிழ் சினிமா வசூலில் மிகப்பெரும் புரட்சி செய்தது. படம் மாஸ் ஹிட்.

இதற்கு பிறகு தளபதி அவர்களின் வாழ்க்கையில் ஏறுமுகம் மட்டுமே. அவர் நடித்த படத்தை தயாரிப்பதற்கு போட்டி போட்டனர். ரஜினிக்கு பிறகு நிச்சய லாபம் தரும் நடிகராக உயர்ந்தார். உயரம் தொடும்போது பல பிரச்சனைகள் வருவது வழக்கம். அது போல இவரது வளர்ச்சி, இவரது ரசிகர்கள் கூட்டம் பெருகுவதை கண்டா ஆளும் காட்சிகளாக விளங்கிய அதிமுக, திமுக இரண்டுமே அவ்வபோது சில தடைகளை ஏற்படுத்தின. ஆனபோதும், அதை எல்லாம் அசால்ட்டாக கடந்து சென்றார் தளபதி.

கடந்தமுறை நடந்த தேர்தலின்போது, அவர் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அப்போது அவருடன் திரளாக வந்த ரசிகர் கூட்டம் சொல்லும் அவர் மீது எந்த அளவுக்கு மக்கள் பாசம் வைத்துள்ளனர் என்று. இன்று பிறந்த நாள் காணும் அவர் மேலும் பல வருடங்கள் ஆரோக்கியத்துடன் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நாமும் வாழ்த்தலாம்!

Next Story

- Advertisement -