Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்-யுவன் சாதனையை முறியடித்த விஜய்.. 5 மடங்கு லாபம் பார்த்த தளபதி 68

இப்போது லியோ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.

ajith-vijay-yuvan

Vijay-Ajith: பல வருடங்களாகவே விஜய், அஜித் இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும் இவர்களின் ரசிகர்களால் சோசியல் மீடியாவே ரணகளம் ஆகிவிடும். ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் இந்த அக்கப்போர் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் செய்தியால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதாவது இப்போது லியோ படத்தை முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது.

Also read: எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

இதுவே ஆச்சரியமாக பேசப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ உரிமமும் பல கோடிக்கு விற்பனையாகி இருப்பது பரப்பரப்பை கிளப்பியுள்ளது. அந்த வகையில் தளபதி 68 படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் 26 கோடிக்கு இந்த உரிமை விற்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்த அளவுக்கு பிசினஸ் ஆகி இருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இதற்கு முன்பாக அவரின் இசையில் உருவான வலிமை படத்தின் இசை உரிமம் 4.5 கோடிக்கு விற்பனையாகி இருந்தது.

Also read: லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்..தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

இதுவே யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்களில் அதிக உரிமை பெற்றதாக இருந்தது. தற்போது அதையே ஓரம் கட்டும் அளவுக்கு தளபதி 68 ஐந்து மடங்கு லாபத்தை பார்த்திருப்பது பெரும் சாதனை தான். இதைத்தான் இப்போது விஜய் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளி விட்டதாகவும் அவர்கள் மார்தட்டி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் அஜித்-யுவன் கூட்டணியின் சாதனையை முறியடித்துள்ள விஜய் தளபதி 68 மூலம் இன்னும் பல சர்ப்ரைஸ்களை கொடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

Continue Reading
To Top