விஜய் கூடவே இருந்து குழிப்பறித்த ரெண்டு இயக்குனர்கள்.. கமுக்கமாக இருந்து காய் நகர்த்தும் கலாநிதி

Actor Vijay: என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விஜய் ஜொலித்து வந்தாலும், கமல் மற்றும் ரஜினியிடம் இருக்கும் ஒரு பர்ஃபெக்க்ஷன் விஜய்யிடம் இருப்பதில்லை. அதாவது விஜய்யை பொருத்தவரை இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நடித்து விட வேண்டும். இவருக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களோ அல்லது இந்த சீனுக்கு பதிலாக இப்படி வைக்கலாமா என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்னும் வளரவில்லை என்று தான் சொல்லணும்.

ஆனால் இடைப்பட்ட காலத்தில் விஜய்யும் இயக்குனரிடம் மல்லுக்கட்டி எனக்கு இந்த இடத்துல இப்படி ஒரு சீன் வேண்டும், இந்த மாதிரி பாட்டு இங்க வைக்கணும் என்று பல ஐடியாக்களை கொடுத்து இருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி அந்த இயக்குனர்களும் மாற்றி அமைத்து படங்களை கொடுத்தார். ஆனால் அது மக்களிடம் சரியாக எடுபடாமல் போய் தோல்வியை சந்தித்தார்.

Also read: மனநோயாளி லோகேஷ், சுயநினைவு இல்லாத விஜய்.. லியோவால் வலுக்கும் கண்டனம்

அதனாலேயே இனிமேல் இந்த மாதிரி விஷயத்தை செய்யவே கூடாது என்று முடிவெடுத்து இயக்குனர் பாணியே பின்பற்ற ஆரம்பித்தார். அப்படித்தான் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தை எடுக்கும் பொழுது இவருக்கு தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதை எதையும் சொல்லாமல் படத்துக்கு தேவையானதை மட்டுமே நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை ஒரு முறை விஜய் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

அதனால் தான் என்னமோ படம் பிளாப் ஆகி பலரும் கேலியும் கிண்டலும் செய்யும் அளவிற்கு படு மொக்கையாக போய்விட்டது. ஆனால் இதற்கு அடுத்து நெல்சன் ஜெயிலர் படத்தை எடுக்கும் பொழுது ரஜினி இந்த தவறை செய்யவே இல்லை. அவருக்கு இருந்த கருத்துக்களை இயக்குனரிடம் முன் வைத்து ரசிகர்களுக்கு எந்த மாதிரி இருந்தா பிடிக்கும் என்று சில காட்சிகளை மாற்றி கொடுத்திருக்கிறார்.

Also read: சித்தாவால் சித்தார்த் பட்ட அவமானம்.. ரஜினி ஃபோன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

அதனால் தான் அந்த படம் மக்கள் கொண்டாடும் படமாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதேபோல தற்போது லியோ படத்திலும் லோகேஷ் என்ன சொல்கிறாரோ அதையே அப்படி வேதவாக்காக எடுத்து நடித்துக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்து விஜய்க்கு தொடர்ந்து பிரச்சினை வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது ரஜினி ரொம்பவே சூதனம் ஆகிவிட்டதால் அடுத்து தலைவர் 171 படத்தில் எப்படி இருக்கணும் எந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஓரளவுக்கு உஷார் ஆகிவிட்டார். இப்படி விஜய் கூடவே இருந்து கேரியரை கெடுக்கும் அளவிற்கு லோகேஷ் மற்றும் நெல்சன் குழி பறித்து இருக்கிறார்கள். இதை எல்லாம் கமுக்கமாக இருந்து வேடிக்கை பார்த்த கலாநிதி மாறன் சரியான நேரத்தில் அவருடைய அடுத்த பிராஜெக்ட்டை ரஜினியை வைத்து வெற்றி பெற இருக்கிறார்.

Also read: நாலா பக்கமும் ஏழரை இழுத்து வைத்திருக்கும் விஜய்.. நேரம் பார்த்து காலை வாரி விடும் கலாநிதி