விஜய் பீஸ்ட் பாட்டிக்கு இவ்வளவு திறமையா.. உச்சகட்ட வருத்தத்தில் திரையுலகம்..!

Vijay Movie Actress: பழம்பெரும் நடிகையும் இசைக்கலைஞருமான ஆர் சுப்புலட்சுமி உடல்நல குறைவு காரணமாக தனது 87-வது வயதில் இன்று காலமானார். இதனால் ஒட்டு மொத்த திரை உலகமே இப்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கேரளாவில் பிறந்த சுப்புலட்சுமி 1951ம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பணியாற்றினார்.

இவர்தான் அகில இந்திய வானொலியில் பணியாற்றிய தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையைப் படைத்தவர். இவர் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி, திரையுலகில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். தனது 66-வது வயதில் முதல் முதலாக பிரித்திவிராஜ் நடித்த நந்தவனம் என்ற படத்தில்  நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்பு 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்த சுப்புலட்சுமி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். அதிலும்  தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்த இந்த பாட்டி இவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறாரா என, இவருடைய மறைவுக்கு பிறகு தான் பல விஷயங்கள் வெளி வருகிறது.

Also read: 2023ல் வெளிவந்த டாப் 10 படங்கள்.. IMDB தரவரிசையில் இடம் பெற்ற ரெண்டே தமிழ் படம்

பீஸ்ட் படத்தில் நடித்த சுப்புலட்சுமி இன்று காலமானார் 

பீஸ்ட் படம் மட்டுமல்ல சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மணி போன்ற படங்களிலும் ஆர் சுப்புலட்சுமி ரசிகர்களின் கவனம் பெற்றவர். அதுமட்டுமல்ல ஹிந்தியில் வந்த தில் பெச்சாராவில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்-கின் பாட்டியாக நடித்திருக்கிறார்.

இது தவிர ஏராளமான விளம்பரங்களிலும் இந்த பாட்டியை பார்க்க முடியும். கலை தாகம் தீராத பிரபல நடிகை சுப்புலட்சுமிக்கு தாரா கல்யாண் என்ற மகள் உள்ளார். இவர் ஒரு நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாள் பரவலாக தெரிந்த இந்த பாட்டி, இன்று மறைந்த பிறகு இவரைப் பற்றி தெரியாத உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது.

Also read: தளபதி 68-ல் ஐந்து நடிகர்களுக்கு மறு வாழ்வு கொடுத்த விஜய்.. வெங்கட் பிரபுவின் கை பக்குவம் வசூலை தருமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்