2023ல் வெளிவந்த டாப் 10 படங்கள்.. IMDB தரவரிசையில் இடம் பெற்ற ரெண்டே தமிழ் படம்

2023 Top 10 Movies: கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் IMDB தரவரிசையில் டாப் 10 இடத்தில் இருக்கும் படங்களின் லிஸ்ட் தற்போதைய இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் இரண்டு தமிழ் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. மற்றவை எல்லாம் ஹிந்தி படங்கள் தான்.

கொரோனா காலகட்டத்தில் பாய் காட் பிரச்சனையால் முடங்கிக் கிடந்த ஹிந்தி சினிமா மீண்டு விட்டது என்பதை இந்த லிஸ்டை பார்த்தாலே தெரிகிறது. இதில் 10-வது இடத்தில், இந்த ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ஆக்சன் திரில்லர் படமான போலோ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

9-வது இடத்தில் ரன்பீர் கபூர்- ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நகைச்சுவை காதல் திரைப்படமான வெளியான ‘தூ ஜூதி மெயின் மக்கார்’ படம் உள்ளது. 8-வது இடத்தை பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படம் பிடித்துள்ளது. 7-வது இடத்தில் ‘காதர் 2’ என்ற அதிரடி ஆக்சன் ஹிந்தி படம் உள்ளது. இந்தப் படம் 1971ல் இந்தியா- பாகிஸ்தான் போரின் போது சிறையில் அடைப்பட்டிருந்த தனது மகனை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்லும் தந்தையின் போராட்டம். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் தாறுமாறாக பட்டையை கிளப்பியது.

Also read: சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

2023ன் டாப் 10 படங்கள்

6-வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி 72 வயதிலும் தன்னை யார் என நிரூபித்த ஜெயிலர் படம் தான் இடம்பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக 5-வது இடத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் ஆன்மீக நெடி வீசிய ‘OMG 2’ படம் இடம் பெற்றுள்ளது.

4-வது இடம் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் இடம்பெற்றுள்ளது. பக்கா ஆக்சன் படமாக வெளியான லியோ இந்த வருடம் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ட்ரீட். 3-வது இடம் ரன்வீர் கபூர்- ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்திற்கு கிடைத்துள்ளது. 2-வது இடம் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பதான் உள்ளது.

முதலிடத்தில் தமிழ் இயக்குனரான அட்லி பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுத்து ஷாருக்கான் வைத்து எடுத்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம்தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பாலிவுட்டிற்கு அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: சூட்டோடு சூடாக லோகேஷ் வெளியிட்ட அப்டேட்.. டைட்டிலுடன் வெளியான மிரட்டல் போஸ்டர்