உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. சதியால் பல லட்சம் நஷ்டம் என புலம்பல்

முதலில் இசை அமைப்பாளராக ரசிகர்களுக்கு பரிச்சயமான விஜய் ஆண்டனி, அதன் பிறகு படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் நடிக்கும் எல்லா படத்திலும் தன்னுடைய அலட்டல் இல்லாத தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டுவதால் இவருடைய ஒவ்வொரு படங்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ கணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் விஜய் ஆண்டனி திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி பிச்சைக்காரன் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

Also Read: பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்.. விபத்தில் இருந்து தப்பித்த விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கும் புது பிரச்சனை

ஏனென்றால் பிச்சைக்காரன் 2 படத்தின் கருவையும் வசனத்தையும் விஜய் ஆண்டனி திருடி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. அதாவது மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ஆய்வுக்கூடம் படத்தின் கதையை தான் அப்படியே விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் காப்பி அடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மாங்குடி மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ கணபதி புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து விஜய் ஆண்டனி பதில் அளிக்கும்படி வழக்கை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலைமை.. மலேசியாவில் இருந்து வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

இந்த மனுவில் ஆய்வுக்கூடம் படம் குறித்து எந்த ஒரு தகவலும் தனக்குத் தெரியாது. அந்தப் படத்தை பார்த்தது கூட இல்லை என்றும் கூறப்பட்டது. சொல்லப்போனால் இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்று விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கே முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு. பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி நேரத்தில் இப்படி மனு தாக்கல் செய்துள்ளனர். அது மட்டுமல்ல பிச்சைக்காரன் படத்தை சதி திட்டம் தீட்டி ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போனதால் பொருளாதார ரீதியாக தனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாக விஜய் ஆண்டனி அந்த மனுவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜய் ஆண்டனி.. மூளையை மாற்றி கம்பேக் கொடுத்த பிச்சைக்காரன் 2

இவ்வாறு பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீசில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல விஜய் ஆண்டனி மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்து இருப்பது அவருடைய ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.

Next Story

- Advertisement -