வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய், அஜித்தை நெருங்க தகுதி வேணும் பாஸ்.. மனசில் என்ன மணிரத்தினம் நினைப்பா?

விஜய், அஜித் இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக போட்டி போட்டு நடித்து வருகிறார்கள். இவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்து யாரும் நெருங்க முடியாத அளவிற்கு உயரத்தில் பறந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் இந்த இடத்தை ஈசியாக அடையவில்லை. ஆரம்ப காலத்தில் நடித்த படங்களின் மூலம் அதிகமான அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து பின்பு படிப்படியாக முன்னேறி வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

இவர்கள் மட்டுமல்ல இப்பொழுது வளர்ந்து வரும் அனைத்து நட்சத்திரங்களும் இதே போல் ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை பார்த்து தான் ஒரு வெற்றியை அடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது ஒருவர், என்னமோ இவர் மட்டும்தான் சினிமாவில் நிறைய அவமானங்கள் சந்தித்து விட்டதாக ஓவர் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவருடைய வளர்ச்சிக்கு யாரோ தடையாக இருப்பது போல் ஓவராக அலப்பறையை கூட்டி வருகிறார்.

Also read: நடுக்கடலில் ரொமான்ஸ் செய்யும் அஜித், ஷாலினி.. வைரலாகும் போட்டோஸ்

அவ்வளவு பெரிய ஆளு வேறு யாருமில்லை விக்னேஷ் சிவன் தான். இவர் ஒரு ஐந்து படங்களை இயக்கிவிட்டு அதிலும் இரண்டு மூன்று படங்கள் மட்டும் தான் வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அதுக்கே இவர் வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சுகிட்டு என்னமோ நான் தான் பெரிய இயக்குனர் என்று சுத்திகிட்டு திரிகிறார். சமீபத்தில் இவர் அஜித் படமான ஏகே 62 படத்தை இயக்க இருந்தது.

ஆனால் இவருடைய அலட்சியத்தினால் அந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது. அதிலிருந்து பெரிய அவமானத்தை சந்தித்தது போல் வலைதளத்தில் நிறைய பதிவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இதுக்கெல்லாம் இவர் தகுதியை கிடையாது. இவர் மற்ற இயக்குனர்கள் போலவே ஒரு சாதாரண இயக்குனர் தான். ஆனால் இவருக்கு என்னவோ அஜித் படம் கிடைத்துவிட்டால் மணிரத்தினம் லெவலுக்கு ஆளாகிறலாம் என்று ஓவராக பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Also read: மோசமான ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்தாத விஜய்யின் 5 படங்கள்.. ஆடியன்சை வெறுக்கச் செய்த தளபதி

மேலும் அஜித் படம் கைநழுவி போனதால் தற்போது விக்னேஷ் சிவனின் டார்கெட் எப்படி இருக்கிறது என்றால் அஜித்க்கு இணையாக ஒரு படத்தை இயக்கி ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்யும் போது அதே நாளில் இவருடைய படத்தையும் வெளியீட்டு அதன் மூலம் அஜித்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஒரு முனைப்புடன் சுத்தி வருகிறார். இது சம்பந்தமாக சில நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அத்துடன் ஓவர் கற்பனையில் இருந்து வருகிறார். இவரிடம் இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் என்கிற நயன்தாரா மட்டும்தான். அந்த பிராண்டை வைத்து தான் இவர் சினிமாவில் ஒரு ஓரத்தில் இயக்குனர் என்ற பெயருடன் இருந்து வருகிறார். இவர்கிட்ட இந்த மாதிரி ஒரு ஆளு இல்லையென்றால் இவரும் மற்ற இயக்குனர்கள் போல தான். இதை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு சரியான நோக்கத்தில் படத்தை இயக்கி வந்தால் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை விட்டு போட்டு விஜய் மற்றும் அஜித்தை நெருங்கனும் என்று நினைத்தால் கூட அதற்கும் ஒரு தகுதி இவருக்கு இருக்க வேண்டும் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது வருகிறார்கள்.

Also read: அஜித் கழட்டிவிட்ட இயக்குனருக்கு தோள் கொடுக்கும் கமல்.. இவரை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படமா.?

- Advertisement -

Trending News