வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வெங்கட் பிரபுவை திட்டமிட்டு ஒதுக்கிய ஏஜிஎஸ்.. உடந்தையாய் விஜய் பண்ணிய அட்ராசிட்டி

வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித்துடன் நட்பு பாராட்டும் ஒரு இயக்குனர். இருவருடனும் இணைந்து படம் பண்ணி இருக்கிறார். ஆளுக்கு ஒரு ஹிட் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித்துக்கு மங்காத்தா படத்தை இயக்கி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டார். அதன் பின் இருவரும் இன்று வரை இணையவில்லை.

இப்பொழுது வெங்கட் பிரபு , விஜய் உடன் கோட் படம் பண்ணினார். அந்த படம் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது. இதற்காக தளபதி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஆனால் அந்த இடத்தில் வெங்கட் பிரபு இல்லை.

பொதுவாக இந்த மாதிரி விழாவில் படத்தின் இயக்குனர் தான் முதலில் இடம் பெறுவார் ஆனால் அந்த இடத்தில் விஜய் மற்றும் அர்ச்சனா இருவரும் பங்கு பெற்றனர். இதனால் வெங்கட் பிரபுவின் தங்கை வாசுகி பாஸ்கர் இந்த இடத்தில் இயக்குனர் இருந்தால் நன்றாக இருக்கும் என தனது அண்ணனை குறிப்பிட்டு ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

வெங்கட் பிரபு அந்த இடத்தில் இல்லாததன் காரணம் இப்பொழுது வெளியாகி உள்ளது. படம் ரிலீஸ் ஆன பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெங்கட் பிரபுவை வைத்து சில ப்ரோமோஷனல் செய்ய திட்டமிட்டு இருந்தார். பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.

உடந்தையாய் விஜய் பண்ணிய அட்ராசிட்டி

படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபு இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து முழுவதுமாக விலகி விட்டார். அந்த சமயம் தயாரிப்பாளர் அர்ச்சனா, வெங்கட் பிரபுவிடம் பிரமோஷன் பற்றி பேசவே அந்த படத்திலிருந்து நான் முழுவதுமாய் வெளியே வந்து விட்டேன் என கூறிவிட்டாராம்.

அதனால் தான் அவரை இந்த கொண்டாட்டத்திற்கு தயாரிப்பாளரும், விஜய் கூப்பிடவில்லை. விஜய் அவருடன் இணைந்து வேட்டையன் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்று இருந்தார். ஆனால் இப்பொழுது இந்த விழாவில் அவர் பங்கு பெறாதது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

Trending News