வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் முழுக்க முழுக்க போட்டோஷாப் நிறைந்தது போல் உள்ளது என பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தளபதி விஜய்யின் நடிப்பில் தளபதி66 திரைப்படமான வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் போஸ்டர் விஜயின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
இதனிடையே இத்திரைப்படத்தின் போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்திருந்தார். இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில், பீஸ்ட், மாஸ்டர், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட மற்ற தமிழ் திரைப்படங்களிலும் போஸ்டர்களை வடிவமைத்திருந்தார்.
இதனிடையே வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தளபதி விஜய் மாசாக கோட் சூட் அணிந்து ஸ்டைலாக இருந்தாலும், அந்த போஸ்டருக்கு பின்னால் கிராபிக்ஸ் அமைக்கப்பட்ட பில்டிங்குகள் இருந்தது. மேலும் ஹாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு போஸ்டரை போலவே வாரிசு பட போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் முழுக்க முழுக்க ஃபோட்டோஷாப் நிறைந்த வண்ணம், இந்த போஸ்டர் அமைந்துள்ளது எனவும் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் தோல்வியடைந்ததை அடுத்து ரசிகர்களுக்காக எப்படியாவது வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய் உள்ளார்.
ஆனால் வாரிசு திரைப்படத்திற்காக வெளியான இரண்டு போஸ்டர்களும் சரியாக அமையாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் வாரிசு பட டைட்டிலும் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஏற்றார் போல் இல்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் கிட்டத்தட்ட 14 லட்ச ரூபாயை பஸ்ட் லுக் போஸ்டர் டிசைனிற்காக மட்டும் செலவு செய்து வெளியிட்ட நிலையில், ஒன்றுக்கும் வேலைக்காகாமல் போய்விட்டது. இருந்தாலும் தளபதி விஜயின் முகம் இளமையாகவும், ஸ்டைலாகவும் உள்ளது என ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.