கோட் சூட்டுடன் கெத்து காட்டும் விஜய்.. டைட்டிலுடன் வெளிவந்த தளபதி-66 பட போஸ்டர்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜூ தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, குஷ்பூ, சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதால் தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.1க்கு வெளிவர இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

அதைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த தகவலை சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்து வந்தனர். மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதியின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்ற ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே பரவி வந்தது.

அதன்படி விஜய் நாளை தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

varisu
varisu

தளபதி 66 படத்திற்கு வாரிசு என படக்குழுவினர் டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த போஸ்டரில் விஜய் கோட் சூட் போட்டு கெத்தாக அமர்ந்தபடி உள்ளார். தற்போது இந்த வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த அந்த பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.

Next Story

- Advertisement -