தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடிய விஜய்யின் 5 படங்கள்.. மெர்சல் முதல் வாரிசு வரை வெளிவந்த ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவே கோலிவுட்டில் வலம் வரும் விஜய், தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வசூலை தாறுமாறாக குவித்து கொண்டிருக்கிறார். அதிலும் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான 5 படங்கள் தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

மெர்சல்: 2017 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை வாரி குவித்தது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 128.3 கோடியை வசூலித்து மாபெரும் வெற்றி கண்டது. இந்த படத்தில் ஒரு ஊருக்கு மருத்துவமனை எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக விஜய் இந்த படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

சர்கார்: 2018 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் தீபாவளிக்கு வெளியான சரவெடி படமாக ரிலீஸ் ஆனது. இந்தப் படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் கடைசியில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து தாறுமாறான வெற்றியை பெற்றது. அதிலும் தமிழகத்தில் மட்டும் 128 கோடியை வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: 64 வயதில் திருமணம் செய்து கொண்ட வாரிசு பட நடிகை.. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல 3வது திருமணம்

பிகில்: 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பார். இவருடன் நயன்தாரா, விவேக் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி தாறுமாறாக திரையரங்கில் ஓடி பட்டைய கிளப்பியது. அதிலும் தமிழகத்தில் மட்டும் பிகில் 145 கோடியை அசால்டாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

மாஸ்டர்: 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 141.5 கோடியை வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read: லியோக்கு அடுத்த ஆப்பு ரெடி.. விஜய்யை விடமால் செக் வைத்து துரத்தும் உதயநிதி

வாரிசு: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியானது. படத்தை இயக்குனர் வம்சி இயக்கி, தில் ராஜு பிரம்மாண்டமாய் தயாரித்திருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். இந்த படம் வெளியான மூன்றே வாரத்தில் உலக அளவில் 300 கோடியை வாரி குவித்த நிலையில், தமிழகத்தில் மட்டும் வாரிசு 147 கோடியை வசூலித்திருப்பது.

இவ்வாறு விஜய்யின் இந்த 5 படங்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் அசட்டாக வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் வாரிசு மூன்றே வாரத்தில் உலக அளவில் 300 கோடியை வசூலித்து வியப்பில் ஆழ்த்தியது.

Also Read: சமீபத்தில் 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்த 5 படங்கள்.. மூன்றே வாரத்தில் விஜய் செய்த சாதனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்