Entertainment | பொழுதுபோக்கு
சமீபத்தில் 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்த 5 படங்கள்.. மூன்றே வாரத்தில் விஜய் செய்த சாதனை
பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை வெகு சீக்கிரமே குவித்த சமீபத்திய 5 படங்கள் லிஸ்ட் இதோ!
பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல சமீப காலமாகவே குறைந்த பட்சத்தில் எடுக்கும் படங்களும் பல கோடி லாபம் பார்க்கிறது. அதிலும் சமீபத்தில் வெளியான 5 படங்கள் அசால்டாக பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை குவித்திருக்கிறது. அதிலும் மூன்றே வாரத்தில் விஜய்யின் படம் செய்த சாதனையால் திரை உலகமே வாயடைத்து போய் உள்ளது.
கேஜிஎப் 2: இந்த படத்தின் முதல் பாகமே, இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. தங்க சுரங்கத்திற்காக பொதுமக்களை அடிமைபடுத்தியவர்களை யாஷ் அழிப்பதாக முதல் பாகத்தில் இருந்தது, இரண்டாம் பாகத்தில் அந்த தங்க சுரங்கத்திற்கு அவரே முதலாளியாக இருந்து மாஸ் காட்டினார். இந்தப்படம் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 1200 கோடி வரை வசூல் செய்தது.
Also Read: வாரிசு துணிவுக்கிடையே 100 கோடி வசூல் வித்தியாசம்.. கிளாஸ் விட்டு ஜெயிச்சு காட்டிய ஆட்ட நாயகன்
விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பட்டையை கிளப்பியது. தனக்கே உரிய பாணியில் அசத்தி இருந்த கமல் இந்த படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸையே தெறிக்க விட்டார். இந்த படம் 400 கோடியை வசூலித்தது.
பொன்னியின் செல்வன்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி உள்ளார். இது தமிழர்களின் வரலாற்று திரைப்படம். இதில் நடிகர் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி 500 கோடியை வசூல் செய்ததோடு அதன் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Also Read: வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் ஓடிடி நிறுவனங்கள்.. வாரிசு, துணிவால் வந்த சோதனை
காந்தாரா: கன்னட மொழியில் வெளியாகி காந்தாரா திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து நிலைத்து நிற்கிறது. நடிகர் ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். காந்தாரா திரைப்படம் கேஜிஎஃப் 2 திரைப்படத்திற்கு அடுத்து உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது கன்னட படம். 16 கோடி பட்ஜெட் கொண்ட இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
வாரிசு: இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகெங்கும் ரிலீஸ் ஆகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. பக்கா குடும்ப செண்டிமெண்ட் படமாக தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் வாரிசு படத்திற்கு எக்கச்சக்கமாகவே கிடைத்தது. அத்துடன் ரிலீசான மூன்றே வாரத்தில் 300 கோடியை தொட்டு பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்திருக்கிறது.
இவ்வாறு இந்த 5 படங்களும் ரிலீஸ் ஆன வெகு சீக்கிரமே 300 கோடி வசூலை அசால்டாக தட்டி தூக்கியது. அதிலும் விஜய்யின் வாரிசு திரைப்படம் மூன்று வாரத்திற்குள்ளேயே 300 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
Also Read: 20 தியேட்டர் வித்தியாசத்தில் முதலிடத்தில் துணிவா, வாரிசா.? ஆட்டநாயகனை உறுதி செய்த 25வது நாள்
