துளியும் வருத்தம் இல்லாமல் மகிழ் திருமேனியை பாராட்டிய விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஏகே 62 படம் வெற்றி தான் கொடுக்கும்

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. இந்நிலையில் அவருடைய கதை மேல் சற்று பிடித்தம் இல்லாததால் தயாரிப்பாளர் மற்றும் அஜித் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி கதையை தேர்வு செய்து ஏகே 62 படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இதனால் அஜித்தின் ரசிகர்கள் பலர் விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இதை முறியடிக்கும் வகையில் விக்னேஷ் சிவன் அஜித்தின் ரசிகர்களுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதாவது நானும் அஜித்தின் தீவிர ரசிகன் தான். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் என்னால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்க முடியாமல் என் கையை விட்டு அந்த வாய்ப்பு போய்விட்டது. ஆனாலும் இதற்கு நான் வருத்தப்படவில்லை.

Also read: மகிழ்திருமேனியை பார்த்து கத்துக்கோங்க அட்லீ.. அட்டை காப்பியடிக்க உருட்டிய கதை

ஏனென்றால் ஏகே 62 படம் தற்போது மிகச் சிறந்த இயக்குனர் மற்றும் எனக்கு பிடித்த இயக்குனர் மகிழ் திருமேனிடம் போய் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அத்துடன் அவர் எனக்கு முன்பே சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். பொதுவாகவே அவரது படங்களின் கதைகள் அனைத்தும் தத்ரூபமாக இருக்கும். இப்படி இருக்கையில் நான் அவருக்குப் பிறகுதான் சினிமாவிற்குள் நுழைந்தேன்.

ஆனால் கொஞ்சம் அவரை விட முன்னுக்கு வந்து விட்டேன். அதனால் அவர் தற்போது ஏகே 62 படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக முன்னாடி வருவார். இதனால் நான் கொஞ்சம் பின்னுக்கு போய்விடுவேன் அவ்வளவுதான். ஆனாலும் இது சினிமாவில் இந்த மாதிரி நடப்பது சகஜம்தான். இதனால் எனக்கு துளியும் கூட வருத்தம் இல்லை என்று சொல்லி மகிழ் திருமேனியை பாராட்டி இருக்கிறார்.

Also read: அஜித்துக்கு அடுத்து ஜாதகத்தை கணித்த இயக்குனர்.. அருண் விஜய்க்கு ஒர்க்அவுட் ஆன சுக்கிர திசை

ஆனாலும் இந்த வாய்ப்பு என்னிடம் இருந்து இப்போது போனாலும் மறுபடியும் என்னிடம் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த படத்தை அஜித்தின் ரசிகராக நாம் அனைவரும் கொண்டாட தான் போகிறோம் என்று அழகாக பேசியுள்ளார். அத்துடன் அஜித்தின் துணிவு படத்தைப் போலவே ஏ கே 62 படம் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்று விக்னேஷ் சிவனின் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

ஆனாலும் இவர் சொல்வதைப் பார்த்தால் அதாவது திரும்பி மறுபடியும் என்கிட்ட வரும் என்று எதை நினைத்து சொல்கிறார் என்று தெரியவில்லை. அவர் சொல்வதற்கு ஏற்ற மாதிரி இப்பொழுது வரை ஏகே 62 படம் ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை மறுபடியும் விட்ட இடத்திற்கே வருகிறார்களா அதாவது விக்னேஷ் சிவன் இடமே போகப் போகிறார்களா அதைத்தான் இப்படி மறைமுகமாக கூறுகிறாரா என்ன தான் நடக்க இருக்கப் போகிறதோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: என்ன விட ராங்கியா இருப்பா போல.. விக்னேஷ் சிவனிடமே நயன்தாராவை பற்றி ஒத்து ஊதிய நடிகை

Next Story

- Advertisement -