ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் விக்னேஷ் சிவன்.. ரோலக்ஸ் போல் நயன்தாரா புருஷன் போடும் பேயாட்டம்

ஒரு காலத்தில் விக்னேஷ் சிவன் என்றால் யாருக்கும் தெரியாது. நயன்தாராவை கல்யாணம் செய்த பிறகு விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கணவர், இவர் ஒரு இயக்குனர் என்பதே எல்லோருக்கும் தெரியும். இவர் எடுத்த படங்கள் ஒன்றும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற எந்த படங்களும் இவருக்கு ஓடவில்லை. இப்படிப் போய்க் கொண்டிருந்த இவரது சினிமா கேரியர் நயன்தாரா வந்த பிறகு தான் லைம் லைட்டுக்கு வந்தது.

அதன் பின் நயன்தாரா சிபாரிசு மூலம் அஜித்தை வைத்து ஒரு படம் பண்ண வாய்ப்பு வந்தது, ஆனால் இவரது ஆட்டிட்யூட் சரி இல்லை என்று அஜித்தே இவரை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வந்தார். இப்பொழுது எல்ஐசி என்ற ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

எல் ஐ சி யை தவிர இவர் கைவசம் எந்த படமும் இல்லை. இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இதில் லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் விக்னேஷ் சிவனின் மோசமான ஆட்டிட்யூட் தான் என்கிறார்கள்.

ரோலக்ஸ் போல் நயன்தாரா புருஷன் போடும் பேயாட்டம்

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து கேமராமேன் ரவிவர்மா மற்றும் நீரவ் ஷா இருவரும் வெளியேறி விட்டனர். விக்னேஷ் சிவன் இன்று வந்த இளம் இயக்குனர். அவரை கேமரா மேன் இருவரும் பெயர் சொல்லி அழைப்பது அவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் அவர்களை இந்த படத்தில் இருந்து வெளியேற்றியதாக ஒரு தகவல் இருக்கிறது.

நயன்தாராவை திருமணம் செய்த பிறகு விக்னேஷ் சிவன் நடந்து கொள்வதில் பல மாற்றங்கள் இருந்து வருகிறது. அவர் மனதில் அவரை ஒரு பெரிய செலிபிரிட்டி போல் நினைத்து வாழ்ந்து வருகிறார். விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மரியாதை வேண்டும் என பேயாட்டம் ஆடுவார் அதே போல் விக்னேஷும் ஆடி வருகிறார்.

Next Story

- Advertisement -