Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி

விக்னேஷ் சிவனால் பதறி ஓடிப்போன பிரபல தயாரிப்பு நிறுவனம்.

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவை காதலித்து, தற்போது திருமணம் செய்துக்கொண்டு குழந்தை, குட்டி என வாழ்ந்து வருகிறார். விக்னேஷ் சிவனுக்கு வந்த பல பட வாய்ப்புகள் நயன்தாராவின் சிபாரிசு தான் என்பது பலருக்கும் தெரிந்ததே.

அந்த வாய்ப்புகளை எல்லாம் அவர் சரியாக பயன்படுத்தினாரா, இல்லையா என்றால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நயன்தாரா தன் பின்னால் இருக்கிறார் என்ற தைரியத்தில் கொஞ்சம் பந்தாவாகவே விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் வலம் வந்துள்ளார். இதன் விளைவை தான் அண்மையில் ஏகே62 படத்திலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து சந்தித்து வருகிறார்.

Also Read:  விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

அஜித்தின் இப்படத்தை இயக்குவதாக விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா பேசி வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அவர் அஜித்துக்கு ஏற்றார் போல் கதையை யோசிக்காமல் போனதால், அஜித் அப்படத்திலிருந்து அவரை நீக்கினார். மேலும் விக்னேஷ் சிவனின் நடவடிக்கை அஜித்துக்கு பிடிக்கவில்லை என்ற செய்தியும் இணையத்தில் உலா வந்தன. இதனிடையே பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம், தன் வேலையை காட்டிய விக்னேஷ் சிவனை பார்த்து, அந்த தயாரிப்பு நிறுவனம் தலை தெறிக்க ஓடிய சம்பவம் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. பிரபல லைகா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்த நிலையில், இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டான் படத்தை இயக்கினார். நடிகை ப்ரியங்கா மோகன்,சமுத்திரக்கணி உள்ளிட்டோர் நடித்த இப்படம் காமெடி காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி மாஸ் வெற்றியை பெற்றது. அந்த வகையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு முன்பாகவே லைகா நிறுவனம் விக்னேஷ் சிவன்,  சிவகார்த்திகேயன் காம்போவில் புதிய படத்தை இயக்க முடிவு செய்தது.

Also Read: போனது போச்சுன்னு தாஜா பண்ணிய விக்னேஷ் சிவன்.. சோலி மொத்தத்தையும் இழுத்து மூடுன லைக்கா

அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் கதைக் கூறுவதற்காக மட்டும், பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் பகுதியில் பைவ் ஸ்டார் ஹோட்டலை புக் செய்து தருமாறு கூறியுள்ளார். இதைக் கேட்ட லைகா நிறுவனம், கதை கூறுவதற்கே இவ்வளவு செலவு வைக்கிறார், என கூறி விக்னேஷ் சிவனை அப்படியே கழட்டிவிட்டு, சி.பி.சக்ரவர்த்தியிடம் சென்றது. தற்போது இதே நிலைமை தான் ஏகே 62 படத்திலும் அரங்கேறியுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் ஒன்று சொல்ல, விக்னேஷ் சிவன் ஒன்று செய்ய என அவரது நடவடிக்கையை பார்த்த அஜித் சைலண்ட்டாக அவரை நீக்கிவிட்டு அடுத்த இயக்குனரை தேடும் பணியில் இறங்கிவிட்டார். இப்படி தனது தேவையில்லாத நடவடிக்கையினால் தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் மன வருத்தத்தில் உள்ளார் விக்னேஷ் சிவன். இவருக்கு ஆதரவாக இருந்த நயன்தாராவும் அவருக்கு அட்வைஸ் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: ஆட்டத்தில் விக்னேஷ் சிவன் இருக்காரா இல்லையா.? மொத்தமா குழம்பிப் போயிருக்கும் கோடம்பாக்கம்

Continue Reading
To Top