விக்னேஷ் சிவன், ரவீந்தர் வரிசையில் இப்போ கீர்த்தி பாண்டியன்.. என்கிட்ட இல்லாதது உங்ககிட்ட என்ன இருக்கு

Actress Keerthi Pandian: பிரபலங்களாக இருந்தால் பேரும் புகழும் எந்த அளவிற்கு கிடைக்குமோ அதை அளவிற்கு அவர்களை குறித்த விமர்சிக்கவும் செய்வார்கள். அதிலும் கொஞ்சம் கூட எதிர்பாராத விஷயம் திடீரென்று நிகழ்ந்தால் அதற்கு கண், காது மூக்கெல்லாம் வைத்து பேச ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி தான் கடந்த வருடம் விக்னேஷ் சிவன்- நயன்தாரா மற்றும் ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு வாழ்த்துக்கள் பலரும் சொன்னாலும் இந்த ஜோடி சேர்வதற்கு பணம்தான் முக்கிய காரணம் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இஷ்டத்திற்கு பேசினார்கள்.

Also Read: அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

இப்போது விக்னேஷ் சிவன், ரவிந்தர் வரிசையில் கீர்த்தி பாண்டியனும் சிக்கிக்கொண்டார். நேற்றைய முன்தினம் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் புகைப்படத்தை வைத்து அசோக்செல்வனின் ரசிகைகள் கீர்த்தி பாண்டியனை கிண்டல் அடித்து பேசி வருகின்றனர்.

‘உங்களுக்கு வேறு பொண்ணே கிடைக்கலையா, எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு, உங்க பக்கத்துல நிக்க கூட அவங்களுக்கு உடம்புல சத்து இல்ல’ என்று இன்னும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர். அசோக் செல்வன் இந்த மாதிரி நடக்கும் என்று, அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

Also Read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

பாடி ஷேமிங், ஒருவரை அசிங்கப்படுத்தி பேசுவதை இப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு ஆண்கள் பதில் அளித்துள்ளனர். அதில்,’ எங்ககிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு என்று கேட்கிறீர்களே, அந்த பொண்ணு கிட்ட 250 கோடி பணம் இருக்கு உங்ககிட்ட இருக்கா? ஏன் உங்களுக்கு இந்த பொறாமை’ என்று ஆண்கள் கிண்டல் அடுத்து வருகின்றனர்.

நயன்தாரா- விக்கி, மகாலட்சுமி- ரவிந்தர் அவர்கள் வரிசையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியனை தற்பொழுது பாடி ஷேமிங் செய்து வருகின்றனர். இருப்பினும் புது தம்பதியர்களான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இருவரும் இதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடிக்கும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து, இப்போது கணவன் மனைவியாக மாறி உள்ளனர். ஆனால் கீர்த்தி பாண்டியனின் பணத்திற்காகத்தான் அசோக் செல்வன் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று நெட்டிசன்கள் மட்டமாக சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர்.

Also Read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

Next Story

- Advertisement -