புலியை விட்டுவிட்டு பூனையை பிடித்து தொங்கும் இயக்குனர்.. இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் பிரதீப்

Pradeep Ranganadhan: கடந்த வருடம் வெளியான லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. ஏற்கனவே ஒரு இயக்குனராக சாதித்துக் காட்டிய அவர் இதன் மூலம் ஹீரோவாகவும் ஜெயித்தார். அதனாலேயே அவருடைய அடுத்த படம் என்ன என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் லவ் டுடே வெளியாகி ஒரு வருடம் நெருங்கப் போகும் நிலையில் இன்னும் பிரதீப்பின் அடுத்த படம் பற்றிய எந்த விஷயமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி மட்டும் பரவிக் கொண்டிருக்கிறது.

Also read: விக்னேஷ் சிவனே பொறாமையில் பொங்கும் படி நயன்தாராவை கொஞ்சிய ஷாருக்கான்.. 5 பேருக்கு கிடைத்த செல்ல பெயர்

அஜித் கழட்டிவிட்ட பிறகு சோர்ந்து போன விக்கி எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஆனால் பிரதீப் லவ் டுடே படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்ததாக ஒரு படம் இயக்கப் போவதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இன்னும் சில இயக்குனர்களின் படத்தில் ஹீரோவாக நடிக்கவும் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புலி கழட்டி விட்டதால் பூனையை விடாமல் பிடித்து தொங்கும் கதையாக விக்கி ஒரு பக்கம் பிரதீப்பை சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

Also read: விக்னேஷ் சிவனுக்கு உச்சகட்ட பயத்தை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட நயன்தாரா.. வீடியோ பார்த்தாலே பக்குனு இருக்கு

இதனால் இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கும் அவர் படம் இயக்கப் போகலாமா அல்லது ஹீரோவாக நடிக்கலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். அதனாலேயே இன்னும் அவருடைய அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பும் வராமல் இருக்கிறது.

மேலும் ஒரு படம் ஹிட் கொடுத்த கையோடு சூட்டோடு சூடாக அடுத்த படத்தை ஆரம்பித்து விட வேண்டும். சிறிது இடைவெளி விட்டாலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வது கஷ்டம் என்று பிரதீப் ரங்கநாதன் குறித்து திரையுலக வட்டாரத்தில் இப்போது சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: ஆரம்பிக்காமலே முடிவுக்கு வந்த விடாமுயற்சி.. விக்னேஷ் சிவனின் சாபம் தான் போல

- Advertisement -