ஹனிமூனுக்காக நாடு நாடாக சுற்றும் விக்கி, நயன்.. உறுதிசெய்த கலக்கல் புகைப்படம்

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்கு செல்ல மாட்டார்கள் என்ற செய்தி இணையத்தில் உலாவியது.

அதாவது நயன்தாரா இப்போது படு பிசியாக இருக்கிறார். முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்திருக்கும் நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவியுடன் நடிக்கயுள்ளார். இதுதவிர பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவனும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்கயுள்ளார். அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். தற்போது அஜித் ஏகே 61 படத்தில் நடித்து வருவதால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவனுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. .

இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் நேரம் இல்லாததால் ஹனிமூன் போக மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

அதாவது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கும் போதே விடுமுறை நாட்களை வெளிநாட்டில் கொண்டாடி வருவார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

Nayanthara-Vignesh Shivan

தற்போது திருமணத்திற்குப் பிறகு இருவரும் தாய்லாந்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஹோட்டலில் இருவரும் தேனிலவு கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்கள் பட வேலைகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -