நெத்தி பொட்டில் அடிக்கும் கதைகளை தேர்வு செய்யும் விதார்த்.. மத்திய அரசுக்கு கிடுக்கு பிடி போடும் சுருளி

Vidharth: 2010 ஆம் ஆண்டு, முதல் படத்திலேயே தன்னை ஒரு சிறந்த நடிகன் என நிரூபித்து விட்டார் ஆக்டர் விதார்த். மைனா படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாக நடித்து பெரிய ஹீரோக்களை எல்லாம் உற்று கவனிக்க செய்தார். இதுவரை விதார்த் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள் எல்லாம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டவை. அந்த அளவிற்கு கதைகளை தேர்வு செய்வதில் தொடர்ந்து மாறுதல்களை காட்டி வருகிறார் விதார்த். 2001 முதல் 2009 வரை 10 வருடங்கள் இவர் சினிமாவில் இருந்தாலும் இவருக்கு அங்கீகாரம் கொடுத்த படம் மைனா.

மின்னலே படத்தில் ஆரம்பித்து குருவி படம் வரை 20 படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்த படம் மைனா. அன்றிலிருந்து இன்றுவரை வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்கள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். விதாரத்திற்கு முற்றிலுமாக மார்க்கெட் இல்லை என்று சொல்ல முடியாது.

குரங்கு பொம்மை, காற்றின் மொழி, ஒரு கிடாயின் கருணை மனு, இறுகப்பற்று, பயணிகள் கவனிக்கவும் என இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தது. இயல்பான தன் நடிப்பினால் குடும்ப அடியன்சை கவர்ந்து விடுவார் விதார்த்.

மத்திய அரசுக்கு கிடுக்கு பிடி போடும் சுருளி

நாளை இவர் நடிப்பில் “அஞ்சாமை” என்ற ஒரு படம் வெளிவர இருக்கிறது. மத்திய அரசாங்கம் நடத்தும் “நீட்” தேர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்த படத்தின் கதையை கேட்கும் போதே விதார்த் அழுதுவிட்டாராம். அஞ்சாமை படம் அவ்வளவு பிரமாதமாக வந்திருக்கிறதாம்.

நீட் தேர்வில் சிறிய அளவில் தகுதி மார்க்கை இழந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட உண்மை கதைகளை எல்லாம் படத்தில் காட்டுகிறார்கள். சென்சார் போர்டு எதிலையுமே கை வைக்கவில்லையாம். எல்லா ஆதாரங்களையும் வைத்து தத்ரூபமாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். கட்டாயமாக இந்த படம் மத்திய அரசுக்கு எதிராக எதிர்வலைகளை ஏற்படுத்தும்

- Advertisement -