விட்டதைப் பிடிக்க தயாரான தனுஷ்.. வில்லங்கமாக யோசித்து வெளியிட்ட வீடியோ பதிவு!

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கக் கூடியவர் தான் நடிகர் தனுஷ். தமிழ்  சினிமாவில் உச்ச நாயகனாக பார்க்கப்பட்ட தனுஷ், தற்போது பாலிவுட், ஹாலிவுட் என தன்னுடைய தரத்தை உயர்த்தி அங்கேயும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததால், அடுத்து கோலிவுட்டில் நிச்சயம் தங்களுடைய ரசிகர்களுக்கு பிடித்தமான படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்து ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் அந்தப் படத்தின் மூலம் விட்டதைப் பிடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார். இதற்காக தந்தையர் தினத்தை முன்னிட்டு அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே, அதில் இடம் பெற்ற படக்காட்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு பதிவிட்டு குஷிப்படுத்தி உள்ளார்.

இதனால் தன்னுடைய ரசிகர்களுக்கு திருச்சிற்றம்பலம் படத்தை குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்வதற்காக இப்படி ஒரு வில்லத்தனமான வேலையை தனுஷ் பார்த்திருக்கிறார். இந்த வீடியோ பதிவில், ‘இயக்குனர் பாரதிராஜா தனுஷுக்கு போன் செய்து உன்னுடைய அப்பாவிற்கு தந்தையர் வாழ்த்தை தெரிவித்து விடு. வரும்போது மறக்காமல் கோட்டர் வாங்கிட்டு வந்துரு’ என தர லோக்கலாக பேசியிருக்கிறார்.

ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் அனிருத் 5 வருடங்களுக்குப் பின்பு இணைவதால் இந்தப்படத்தின் இசை எவ்வாறு அமைந்திருக்கும் என பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் தனுசுடன் ஏற்கனவே குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் மித்ரன் ஜவஹர் 4-வது முறையாக திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுடன் இணைந்திருப்பது இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் பிரியங்கா பவனி சங்கர், நித்யா மேனன் மூன்று கதாநாயகிகள் லீட் ரோலில் நடிக்கின்றனர். மேலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு முன்பே தனுஷ் பாலிவுட்டில் நடித்த ‘தி கிரே மேன்’ திரைப்படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையிடப்படுவதால் இந்த இரண்டு படங்களும் தனுஷுக்கு நிச்சயம் கம் பேக் ஆக இருக்கும் என நம்புகிறார்.

Next Story

- Advertisement -