வெற்றிமாறன் பட நடிகர் கையில் இருக்கும் 4 படங்கள்.. மாஸ் காட்ட போகும் ஹீரோ

வெற்றிமாறன் கதையில் நடித்தால் கண்டிப்பாக அந்த ஹீரோ வேற லெவலில் பிரபலம் அடைந்து விடுவார். அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் விடுதலை படத்தில் நடித்த சூரி இப்போது மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார். இவருக்குள் இப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு இருக்கிறதா என பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார் வெற்றிமாறன்.

அவ்வாறு வெற்றிமாறன் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சைலன்டாக நான்கு படங்களில் முடித்துள்ளார். இந்த நான்கு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போது உள்ள ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: வெற்றிமாறனிடம் இருந்த கெட்ட பழக்கம்.. தெரியாமல் மாட்டிக் கொண்டு கண்ணீர் விட்ட ஆண்ட்ரியா

அதாவது இயக்குனராக அறிமுகமான அமீர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வடசென்னை படத்தில் தனுஷை காட்டிலும் அமீருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அமீர் தான் இயக்கிய சில படங்களில் நடிக்கவும் செய்தார். சமீபகாலமாக அவரைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் சைலன்டாக நான்கு படங்களை முடித்து உள்ளாராம். இதில் முத்து கோபால் இயக்கத்தில் அச்சமில்லை அச்சமில்லை மற்றும் நாற்காலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Also read: செட்டே ஆகாத கேரக்டரை தேர்வு செய்த வெற்றிமாறன்.. விஜய்சேதுபதிக்கு முன் விடுதலை பட வாத்தியார் யார் தெரியுமா?

மேலும் அமீர் சுல்தான் தான் சொந்தமாக இயக்கும் இறைவன் மிக பெரியவன் படத்தில் அவரே நடித்துள்ளார். இந்தப் படங்கள் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் வெளியாக இருக்கிறது. மேலும் அமீர் எப்போதுமே வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

அந்த வகையில் கண்டிப்பாக இந்த படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில வருடங்களாக அமீரின் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகாத நிலையில் அவரது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இந்த படங்கள் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: மனித உருவில் மிருகமாய் இருக்கும் 5 இயக்குனர்கள்.. மூன்று பகுதிகளையும் திருப்பி எடுத்த வெற்றிமாறன்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -