Connect with us
Cinemapettai

Cinemapettai

Entertainment | பொழுதுபோக்கு

மனித உருவில் மிருகமாய் இருக்கும் 5 இயக்குனர்கள்.. மூன்று பகுதிகளையும் திருப்பி எடுத்த வெற்றிமாறன்

குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தங்களுடைய படங்களின் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அசுரத்தனமாக வேலை செய்வார்கள்.

இயக்குனர்களில் சிலர் தங்களுடைய படைப்புகள் தனியாக தெரிய வேண்டும் என்று பல புதிய முயற்சிகளை எடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி கதை பாணி இருக்கும். காமெடி, கமர்சியல் என தங்களுடைய பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள். குறிப்பிட்ட சில இயக்குனர்கள் தங்களுடைய படங்களின் காட்சிகள் அப்படியே தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று அசுரத்தனமாக வேலை செய்வார்கள்.

வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் அடையாளம் என்று சொல்லலாம். தான் நினைத்த காட்சி வர வேண்டும் என்பதற்காக நடிகர்களை உலுக்கி எடுக்கக் கூடியவர், அவருடைய நான்கு வருட உழைப்பிற்கு கிடைத்த பலனாக இன்று விடுதலை திரைப்படம் தமிழகம் எங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் தான் நினைத்தது போன்று காட்சி வரவில்லை என்று மூன்று செடியூல்கள் சரியா வரவில்லை என்று திருப்பி எடுத்துள்ளார்.

Also Read:செட்டே ஆகாத கேரக்டரை தேர்வு செய்த வெற்றிமாறன்.. விஜய்சேதுபதிக்கு முன் விடுதலை பட வாத்தியார் யார் தெரியுமா?

பாலா: இயக்குனர் பாலாவுடன் படம் பண்ண முன்னணி ஹீரோக்களே தயங்குவார்கள். சினிமாவில் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபிப்பதற்காக வேண்டுமானால் ஒரு சில ஹீரோக்கள் அவர்களாகவே இவரிடம் மாட்டிக் கொள்வது உண்டு. இவர் படத்தில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் இல்லாமல் சக கலைஞர்களையும் வாட்டி எடுத்து விடுவார் பாலா.

மிஷ்கின்: இயக்குனர் மிஷ்கினும், பாலாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவர்கள் தான். மிஷ்கின் எதார்த்தமான கதைகளை எடுக்க கூடியவர். ஆனால் இவருடைய படங்களின் காட்சிகள் அதிக வன்முறையை காட்டுவது போல் சில நேரங்களில் அமைந்து விடும். வன்கொடுமை மற்றும் கொலை போன்ற காட்சிகளை ரசிகர்களுக்கு அப்படியே கண் முன் நிறுத்துவார்.

Also Read:விடுதலை பட வெற்றிக்கு பின் வெற்றிமாறன் தொடங்கும் 3 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

பாலு மகேந்திரா: இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ் சினிமாவை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தியவர் என்று கூட சொல்லலாம். இவர் ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் காட்சிகளில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறாரோ அதே அளவுக்கு காட்சி அமைப்பிலும் கவனம் செலுத்தக்கூடியவர். இவருடைய இயக்கத்திற்கு மூன்றாம் பிறை என்ற ஒரு படமே மிகப்பெரிய சாட்சி.

மகேந்திரன்: இயக்குனர் மகேந்திரனை எதார்த்த இயக்குனர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு இயல்பாக இருக்கும். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள் போன்றவை இவருடைய சிறந்த படங்களுக்கு எடுத்துக்காட்டு. ரஜினிகாந்த் என்றால் ஸ்டைல் மற்றும் மாஸ் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்குள் இருக்கும் ஒரு நடிகனை ரசிகர்களுக்கு காட்டியவர் மகேந்திரன்.

Also Read:11 நாட்களில் விடுதலை படத்தின் மொத்த வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை

Continue Reading
To Top