எனக்கு ஆர்டர் போடற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க.. வெற்றிமாறனிடம் அசிங்கப்பட்ட சிங்கம்

Director Vetrimaaran: பெயரிலேயே வெற்றியை வைத்திருக்கும் வெற்றிமாறன் தொட்டதெல்லாம் துலங்கிவிடும். அதனாலேயே அவருடைய படைப்புகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஹீரோவுக்கான கதையாக இல்லாமல் கதைக்கேற்ற மாதிரி ஹீரோவை காட்டுவது தான் இவருடைய சிறப்பு.

அதை எதற்காகவும் இவர் மாற்றிக் கொள்ள மாட்டார். இதற்கு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது சூர்யா அடுத்ததாக வெற்றிமாறனுடன் வாடிவாசலில் கைகோர்க்க இருக்கிறார். இதில் இயக்குனர் அமீருக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது.

ஆனால் இப்போது சிவக்குமார் குடும்பத்திற்கும் அமீருக்கும் இடையே இருக்கும் பஞ்சாயத்து பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இதில் அமீருக்கு தான் அதிக ஆதரவும் கிடைத்து வருகிறது. இதையெல்லாம் பார்த்த சூர்யா வாடிவாசலில் அமீர் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: பொண்டாட்டிக்காக செஞ்சீங்க, தம்பிய விட்டுடீங்களே சூர்யா சார்.. உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா?

அது மட்டுமின்றி மோகன்லால் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறனிடம் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதை ஏற்காத வெற்றிமாறன் கதைக்கு நீங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் அமீரும் முக்கியம் என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த படத்துக்கு யார் வேண்டும் வேண்டாம் என்று நான் தான் சொல்லணும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் சூர்யா தான் இப்போது அசிங்கப்பட்டு போயிருக்கிறாராம். ஏனென்றால் சமீபத்தில் வெற்றிமாறன், அமீர் இருவரும் வாடிவாசல் பற்றி கலந்தாலோசித்த புகைப்படம் வெளியானது.

இதற்குப் பின்னால் இந்த சம்பவம் தான் இருக்கிறது. ஆரம்பத்திலேயே அமீர், சூர்யா நடிப்பது தெரிந்தும் இதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். ஏனென்றால் நடிப்பு வேறு சொந்த பிரச்சினை வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்திருக்கிறார். ஆனால் சூர்யாவின் குடும்பம் அதைப்பற்றி யோசிக்காமல் வாயை கொடுத்து புண்ணாக்கி இருக்கின்றனர்.

Also read: நண்டு சிண்டெல்லாம் அறிக்கை வெளியிட்டு கார்த்தியை அசிங்கப்படுத்திட்டு.. வாடிவாசல் ஹீரோவாக மாறும் ராஜன்