நண்டு சிண்டெல்லாம் அறிக்கை வெளியிட்டு கார்த்தியை அசிங்கப்படுத்திட்டு.. வாடிவாசல் ஹீரோவாக மாறும் ராஜன்

Actor Karthi : கார்த்தி பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்போது அமீர் மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோரின் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பருத்திவீரன் படம் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இதனால் கார்த்திக்கு அடையாளம் கொடுத்தது அமீர் தான்.

இந்த சூழலில் கார்த்தி இந்த விவகாரத்தில் வாயைத் திறக்காமல் மௌனம் காத்து வருவது பலரையும் எரிச்சல் அடைய செய்கிறது. இந்நிலையில் நண்டு, சிண்டு எல்லாம் அசிங்கப்படுத்தும் அளவுக்கு கார்த்தியை பிரபலம் ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது பருத்திவீரன் படத்தில் குட்டிசாக்கு என்னும் விமல் ராஜ் நடித்திருந்தார். அவர் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஞானவேல் அவர்கள் பேசிய காணொளியை பார்த்தேன். அந்தச் சமயத்தில் தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து வந்து நடிப்பு சொல்லி கொடுத்தது அமீர் மாமா தான். அவர் மீது இப்படி ஒரு பழியை சுமத்தியது மிகவும் வேதனையாக இருக்கிறது.

Also Read : இதை விட சூர்யா, கார்த்தியை அசிங்கப்படுத்த முடியாது.. இப்பவாச்சும் பேசுங்கய்யா, ஒரே மீமில் வறுத்தெடுத்த ப்ளூ சட்டை

மேலும் இந்த பிரச்சனை நடந்த போது அங்கு நேரில் பார்த்த நபர் என்ற பெயரில் எல்லாவற்றையும் நான் அறிவேன். படத்தின் தொடக்க நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அமீர் மாமா அதன் பிறகு மன அழுத்தத்தில் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் தவறை உணர்ந்து ஞானவேல் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் எனக்கும், கார்த்தி அண்ணாவுக்கும் அதுதான் முதல் படம். ஆனால் அந்த சூழலை நன்கு அறிந்த அவர் மௌனம் காப்பது தவறு என விமல் ராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு இருக்கும் அக்கறை கூட கார்த்திக்கு இல்லையா என பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் என்னதான் சூர்யா, கார்த்தி இவர்கள் இருவரும் அமீர் மீது மனக்கசப்பில் இருந்தாலும் வாடிவாசலில் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது. அதுவும் சூர்யா தான் ஹீரோவாக நடித்தாலும் அவரை விட வெயிட்டான கதாபாத்திரம் தான் அமீருக்கு தான் வெற்றிமாறன் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகையால் வடசென்னை ராஜனை விட மிரட்டல் ஆக வாடிவாசலில் அமீர் வர இருக்கிறார்.

karthi-paruthiveeran
karthi-paruthiveeran

Also Read : பருத்திவீரன் படத்தில் ராமதாஸை கவனிச்சீங்களா.! எவ்வளவு பெரிய சம்பவத்தை செஞ்சுட்டு அசால்டா அமீர் சொன்ன பதில்