நாகேஷுக்கு டஃப் கொடுத்த டி எஸ் பாலையா.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் நாகேஷ், சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீநிவாசன் போன்ற காமெடி ஜாம்பவான்கள் தங்கள் நகைச்சுவை திறமையால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் தனக்கான தனி ஸ்டைலோடு நகைச்சுவையில் கலக்கியவர் தான் டி எஸ் பாலையா. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து இருக்கிறார்.

1. தில்லானா மோகனாம்பாள் : தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். இந்த படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எம். என். நம்பியார், கே. பாலாஜி, டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ், சி. கே. சரஸ்வதி, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரயில் பயண காட்சியில் பாலையாவின் காமெடி இன்றுவரை ரசிக்கும் படி இருக்கும்.

Also Read: கமல்ஹாசனை வியக்க வைத்த பிரபலம்.. இறுதிவரை அவருடன் இணைய முடியாமல் போன துரதிர்ஷ்டம்

2. காதலிக்க நேரமில்லை: காதலிக்க நேரமில்லை 1964 ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான திரைப்படம். ரவிசந்திரன், காஞ்சனா, டி. எஸ். பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நாகேஷ், பாலையாவிடம் திகில் கதை சொல்லும் போது பாலையா வசனம் எதுமே இல்லாமல் முகபாவனையால் சிரிக்க வைத்திருப்பார். மேலும் இந்த சீனில் நாகேஷை விட பாலையா அதிகம் ஸ்கோர் செய்திருப்பார்.

3.பாமா விஜயம்: 1967 ஆம் ஆண்டு இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய திரைப்படம் பாமா விஜயம். இந்த படத்தில் நாகேஷ், முத்துராமன், ஸ்ரீகாந்துக்கு அப்பாவாக டி எஸ் பாலையா நடித்திருப்பார். திருமணமாகி குழந்தைகளுடன் வாழும் மகன்கள் மற்றும் மருமகள்களை அவருடைய நகைச்சுவை பாணியில் நல்வழிப்படுத்தும் கேரக்டரில் கலக்கி இருப்பார்.

Also Read: எம்ஜிஆர் எச்சரித்தும் கேட்காத 4 நடிகர்கள்.. கோபப்பட்டு ஒதுக்கி வைத்த ஹீரோ

4. ஊட்டி வரை உறவு: இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா, முத்துராமன் நடித்த திரைப்படம் ஊட்டி வரை உறவு. இந்த படத்தில் செல்வாக்கு மிக்க தொழிலதிபராக, சிவாஜியின் தந்தையாக டி எஸ் பாலையா இருப்பார். தன்னுடைய இரண்டாவது திருமணத்தையும், அந்த திருமணத்தில் பிறந்த மகளையும் மறைப்பதற்கு இவர் படும்பாடு ரசிக்கும்படி இருக்கும்.

5.திருவிளையாடல்: 1965 ஆம் ஆண்டு ஏ பி நாகராஜன் இயக்கத்தில் ரிலீசான திரைப்படம் திருவிளையாடல். இந்த படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, முத்துராமன், நாகேஷ், மனோரமா, டி எஸ் பாலையா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தருமியாக வரும் நாகேஷ் எந்த அளவுக்கு ஸ்கோர் செய்தாரோ அதே அளவுக்கு ஹேமநாத பாகவதராக வரும் பாலையாவும் ஸ்கோர் செய்திருப்பார்.

Also Read: நாகேஷை தூக்கி எறிந்த பாலச்சந்தர்.. எம் ஜி ஆரால் பிரிந்து போன நட்பு

Next Story

- Advertisement -