விஜய்யை பார்த்தால் எரிச்சலாக இருக்கு.. கங்கை அமரன் சொல்லும் காரணம் என்ன தெரியுமா.?

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய ஆரம்பகால படங்களை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். தந்தையால் சினிமாவில் அறிமுகமான விஜய் தன்னுடைய கடின உழைப்பால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்ய விண்ணப்பித்த நிலையில், விஜய் தனது ரசிகர்களை அதில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் தன் பெயரை பயன்படுத்துவோர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் விஜய் கூறியிருந்தார்.

இதனால் விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் பேச்சுவார்த்தையில் இல்லை. அவருடைய தந்தையின் தொலைபேசி அழைப்பை விஜய் எடுப்பதில்லை. விஜய் ஒரு நடிகர் ஆக்குவதற்காக என் தொழிலில் பல்வேறு தியாகங்கள் செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர் கூறியிருந்தார்.

சமீபத்தில் கங்கை அமரன், விஜய் தன்னுடைய அப்பாவை தள்ளி வைத்தது பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். கங்கை அமரன் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் நாடகத்திற்கும் கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.

இப்போது கங்கை அமரன் பேசுகையில், விஜய் சிறிய குழந்தை இருக்கும்போது அவரை நாங்கள் கொஞ்சிவிட்டு செல்வோம். மேலும் எனக்கு ஒன்றும் பயமில்லை நான் வெளிப்படையாகச் சொல்லிவிடுவேன், விஜய் அவரது தந்தையை தள்ளிவைத்த செய்தி கேட்டபோது எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

நாங்கள் பெரியவர்கள் விமர்சனங்களை சொல்லத்தான் செய்யவும். அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டி சொல்லலாம். ஆனால் விஜய் தன் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை ஒதுக்கி வைப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Next Story

- Advertisement -