பூனை வால்ன்னு நினைச்சு புலி வால புடிச்சுட்ட.. அர்ச்சனாவிடம் மோதும் முட்டை போண்டா!

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அமுல் பேபி விஷ்ணு மூன்று நாள் அடாவடி செய்வது நான்கு நாள் அடங்கிப் போய் இருப்பது என புதுவிதமான ஸ்டேடர்ஜியை கண்டுபிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த விஜய் வர்மா இந்த பிளானை எல்லோர் முன்னிலையிலும் உடைத்து விட்டார். இந்த வாரம் யாருடன் மோதுவது என்று தெரியாமல் விழி பிரிந்த அமல் பேபி அர்ச்சனாவிடம் சேட்டையை ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வாரம் நிக்சன் கேப்டன் ஆனது விஷ்ணுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. இதனால் நேற்றிலிருந்து விஷ்ணு சிடுசிடுவென தான் சுற்றிக் கொண்டிருந்தார். பூர்ணிமா மற்றும் மாயாவின் பிளான் தெரியாமல் நேற்று நிக்சன் மீது புகார் கொடுத்து, சலசலப்பை ஏற்படுத்தினார். அதே நேரத்தில் அர்ச்சனாவிடமும் சற்று மோதி பார்த்தார்.

அர்ச்சனாவிடம் மோதிய விஷ்ணு

ஏற்கனவே அர்ச்சனா ஆரம்பத்தில் அழுததை குறிப்பிட்டு கடந்த வாரம் பேசி அர்ச்சனாவிடம் சரியாக வாங்கி கட்டிக்கொண்டார் பிக் பாஸ் வீட்டின் முட்டை போண்டா. இது போதாது என்று இன்று காலையில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது தேவை இல்லாமல் இந்த வீட்டில் அஞ்சலி பாப்பா போல் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று நக்கலாக ஒரு வார்த்தையை விட்டார்.

Also Read:மாயாவின் தந்திரத்தை கண்டுபிடித்த விச்சு.. அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா.? துரோகி

அந்த டாஸ்க் முடிந்த பிறகு ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்று விட்டார்கள். அந்த நேரத்தில் அர்ச்சனா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே பெரிய சண்டையை ஏற்பட்டது. ஆனால் யாருக்கு என்ன வந்தது என்பதுபோல் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

அதிலும் விஷ்ணு கைகளை வீசி பளார் பளார் என்று அறைந்து விடுவேன் என அர்ச்சனாவை பார்த்து சொல்கிறார். அந்த இடத்தில் மாயா, பூர்ணிமா மற்றும் ரவீனா ஆகியோர் துள்ளி குதித்து டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். பிரதீப்பால் பெண்களுக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொன்னவர்களில் இந்த மூன்று பேரும் ரொம்பவும் முக்கியமானவர்கள்.

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசும் இவர்களுக்கு விஷ்ணு, அர்ச்சனாவை அறைந்து விடுவேன் என்று சொன்னது தப்பாக தெரியவில்லை போல. கடந்த இரண்டு வாரங்களாக அர்ச்சனாவை மகள் போல் பார்த்துக் கொண்டிருந்த விசித்ராவும் இந்த விஷயத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு, அர்ச்சனா உன் மேல் தான் தப்பு இருக்கு என்று சொல்வது துரோகத்தின் உச்சம்.

Also Read:அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரியான நிக்சன், என்ன கொடுமை சார் இது.!