மாயாவின் தந்திரத்தை கண்டுபிடித்த விச்சு.. அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு தெரியுமா.? துரோகி

Biggboss 7: ஆளாளுக்கு ஒரு தந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டையே சூனியக்கார வீடாக மாற்றி இருக்கின்றனர். அதன்படி நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மாயாவின் கேம் பிளான் யாரும் எதிர்பாராததாக தான் இருக்கிறது.

ஒவ்வொருவரையும் திட்டம் போட்டு நாமினேட் செய்வதிலிருந்து யாரை எங்கு அடித்தால் வீழ்வார்கள் என்ற தந்திரத்தையும் அவர் தெரிந்து வைத்துள்ளார். அதுவே பிரதீப் வெளியேற்றத்திற்கும் ஒரு காரணமாக அமைந்தது. இப்படியாக அவர் நினைத்தவரை எல்லாம் வீட்டை விட்டு வெளியேற்றி வருகிறார்.

அதில் பூர்ணிமாவும் விதிவிலக்கல்ல என்பது நாமினேஷனிலேயே தெரிந்தது. அதைத்தான் தற்போது விசித்ராவும் மாயாவிடம் நேரடியாக கேட்கிறார். அதை மறுக்காத மாயா நான் துரோகம் செய்ய மாட்டேன் முகத்திற்கு நேராக சொல்லிவிடுவேன் என கூறுகிறார்.

Also read: அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரியான நிக்சன், என்ன கொடுமை சார் இது.!

அந்த வகையில் மாயா தன் திட்டத்திற்கு பூர்ணிமாவை பயன்படுத்திக் கொண்டதை விசித்ரா கண்டுபிடித்துள்ளார். சைக்காலஜி படித்த இவருக்கு இந்த விஷயம் இப்பொழுது தான் தெரிகிறது என்பது ஆச்சரியம் தான். ஆனாலும் மாயாவின் தந்திரத்தை கண்டுபிடித்ததால் இனி வரும் நாட்களில் இவருடைய கேம் ப்ளானும் மாற வாய்ப்பு இருக்கிறது.

அதன்படி மாயா, பூர்ணிமாவை நாமினேட் செய்திருந்தாலும் ஸ்கெட்ச் என்னவோ நிக்சனுக்கு தான். இதை பல இடங்களில் அவர் வெளிகாட்டி இருக்கிறார். ஆனால் தன்னை நாமினேட் செய்த கோபத்தில் பூர்ணிமா நிக்சனை காப்பாற்றும் வேலையிலும் இறங்கினார்.

இப்படியாக இந்த விளையாட்டின் யுக்தி நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது இதில் மாயா யாருக்கு அடுத்த பாயாசம் போடுவார் என்ற பதட்டம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் இருக்கத் தான் செய்கிறது. ஆக மொத்தம் முதுகில் குத்துவதும், துரோகமும் தான் இந்த சீசனின் முக்கிய யுக்தியாக இருக்கிறது.

Also read: பிரதீப் முதுகில் குத்திய துரோகிகள்.. 12-ல் 4 விக்கெட் காலி, அடுத்தது இவங்க தான்.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்