சௌந்தர்யா, பாரதியை விட இவங்களுக்கு குறைத்த சம்பளமா.? சீரியலின் பில்லரே இவங்கதான்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் அனுதினமும் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீரியலில் கண்ணம்மாவிற்கு மறைத்து வைக்கப்பட்ட சிகரெட்டை எல்லாம் தொடர்ந்து ரிலீஸ் செய்துள்ள சீரியலின் இயக்குனர்.

ஒருவேளை பாரதிகண்ணம்மா சீரியல் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களா? என்றும் ரசிகர்கள் குழம்பித் தவிக்கின்றனர். இந்த சூழலில் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பள விபரம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது,

அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் பாரதி ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார். அதேபோன்றுதான் கதாநாயகியாக நடிக்கும் கண்ணம்மா ஒரு நாளைக்கு ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.

மேலும் சௌந்தர்யா ஒரு நாளைக்கு ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் ஆகவும், பாரதியின் அப்பா வேணு ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரம்  சம்பளமும் பெறுகின்றனர். அதைப்போல் பாரதிகண்ணம்மா சீரியலின் வில்லியான வெண்பா ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

bharathikannamma-cinemapettai2
bharathikannamma-cinemapettai2

பாரதிகண்ணம்மா சீரியலின் பில்லராக இருக்கும் வெண்பா மற்ற பிரபலங்களை விட கம்மியாக சம்பளம் வாங்குவது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சீரியலின் விறுவிறுப்பை கூட்டுவது வெண்பா தான்.

மேலும் நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் கூட, தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக்கொண்டிருக்கும் வெண்பாவிற்கு மற்ற நடிகர்களை விட குறைவாக சம்பளம் தருவதில் நியாயமா? என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்