வெளிவரும் செய்திகளை வைத்து கணித்த கோட் படத்தின் கதை.. பட்டி டிங்கரிங் பார்த்த வில் ஸ்மித் படம்

கோட் படத்தில் நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது வெளிவரும் செய்திகளை வைத்து கணித்தால் இது பாலிவுட் படத்தின் தழுவல் என்பது அப்பட்டமாக தெரிகிறது. இந்த படத்தில் விஜய்க்கு மூன்று விதமான கெட்டப்புகள்.

அப்பா – மகன் என்று இரண்டு கெட்டப்பில் வருகிறார் விஜய். ஆனால் படத்தில் இன்னொரு விஜய் மூன்றாவதாக தோன்றுகிறார். அந்த விஜய் படத்தில் பத்து நிமிடங்கள் தான் வருகிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஃப்ளாஷ் பேக்கில் வைத்திருக்கிறாராம் . படத்தில் ஒரு விஜய் ராணுவத்தில் பணி புரியும் சோல்ஜர் என்றும் கூறுகிறார்கள்.

இதே போல் 2019இல் ஹாலிவுட் படம் ஒன்று வந்திருக்கிறது. விஜய்யை போல அந்த படத்திலும் ஹீரோ மூன்று கெட்டப்பில் தோன்றுகிறார். அப்பா மகன், மற்றும் ஒரு கதாபாத்திரம் என 3 கேரக்டர்ஸ் . இதை வைத்து வில் ஸ்மித் நடித்த அந்த படத்தின் தழுவல் தான் என்று கணித்துள்ளனர்.

பட்டி டிங்கரிங் பார்த்த வில் ஸ்மித் படம்

வில் ஸ்மித் நாயகனாக நடித்த படம் ஜெமினி மேன். இந்த படத்திலும் வில் ஸ்மித் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார்.ராணுவத்தில் பணிபுரியும் ஸ்னைப்பர் ஸ்பெஷலிஸ்ட் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். வெகு தொலைவில் இருந்து டார்கெட்டை வீழ்த்தும் துப்பாக்கி சுடும் வீரர்.

அந்த வயதான ராணுவ வீரர் சில கொலைகளை செய்கிறார். குளோன் மூலம் செய்யப்பட்டராணுவ வீரர் மாதிரியான ஒரு உருவம் அவரை பின்தொடர்கிறது. அது யார் ஒரே மாதிரியாக இருக்கிறோமே என்பதை கண்டறியும் கதைக்களமாய் உருவாக்கப்பட்டது தான் ஜெமினி மேன்படம். இந்த படத்திலும் மூன்றாவதாக ஒரு வில் ஸ்மித் கதாபாத்திரம் சஸ்பென்சாக இருக்கும்.

இப்பொழுது விஜய் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் படமும் இதே கதைக்களம் கொண்டதுதான் என கூறப்படுகிறது. படத்தின் ஏஐ டெக்னாலஜியில் நிறைய வேலைகள் மீதம் இருக்கிறது. விஜய்யை “டி ஏஜிங்” தொழில்நுட்பத்தில் இளமையாக காட்டவிருக்கிறார்கள். அதற்காக லண்டனில் தீவிரமாக வேலை செய்து வருகிறது கோட் டீம்.

Next Story

- Advertisement -