பிரசாந்தை ஒதுக்கீட்டு வெங்கட் பிரபு செய்த காரியம்.. விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்படும் அந்தஸ்து

Vijay and Prasanth Thalapathy 68: விஜய், லியோ படத்தை நடித்து முடித்த கையோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் இணைந்து விட்டார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் வெங்கட் பிரபு என்றாலே யுவன் சங்கர் ராஜா இல்லாமல் எப்படி, அந்த வகையில் இப்படத்திற்கு யுவன் தான் இசையமைக்கிறார். மேலும் இதில் ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி இருக்கிறார்.

அத்துடன் இதில் இன்னொரு ஹீரோவாக நடிகர் பிரசாந்தும் கமிட்டாய் இருக்கிறார். இவர் விஜய்யின் நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கேரக்டரில் கதை உருவாகிறது. அதனால் இவர்களுடைய வயது தெரியாமல் இருப்பதற்காக டி ஏஜெனிங் டெக்னாலஜியை பயன்படுத்தி பிரசாந்த் மற்றும் விஜய்யை இளமையாக காட்டுகிறார்கள்.

ஆரம்பத்தில் பிரசாந்த் உடைய கேரக்டர் நெகட்டிவ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் இரண்டாவது ஹீரோவாக கமிட் ஆகிவிட்டார். இந்நிலையில் வெங்கட் பிரபு, பிரசாந்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் அவரை ஒதுக்கும் படியாக பல விஷயங்களை செய்து வருகிறார்.

Also read: விஜய் போட்ட கண்டிஷன்.. கண்டுக்காமல் வெங்கட் பிரபு செய்யும் சேட்டை

அதாவது படத்தின் கதையை முழுவதுமாக பிரசாந்திடம் சொல்லாமல், அவர் நடிக்கும் கதையை மட்டும் சொல்லி நடிக்க வைத்து கொண்டு வருகிறார். ஆனால் விஜய்க்கு இந்த படத்தின் முழு கதையும் சொல்லி அவருக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறார். அதற்குக் காரணம் விஜய்யை தவிர வேற யாருக்கும் கதை தெரியக்கூடாது என்பதற்காக சீக்ரட்டாக காய் நகர்த்தி வருகிறார்.

பிரசாந்தும் நமக்கு இந்த படத்தின் மூலம் ஒரு மாற்றம் கிடைக்கும் என்பதால் அவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு நடிக்கிறார். மற்ற விஷயங்களில் பெருசாக கண்டுக்கவில்லை. அடுத்ததாக இப்படத்தில் முக்கியமான ரோலில் பிரபுதேவாவும் நடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் வெங்கட் பிரபு படம் என்றாலே ஒரு கேங் எப்போதுமே இருக்கும். அவர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சினேகா, லைலா, அஜ்மல், விடிவி கணேசன் போன்ற பல பிரபலங்கள் இதில் கமிட்டாகி இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தளபதி 68 படம் மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. தற்போது மொத்த குழுவும் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் சூட்டிங் நடத்திக் கொண்டு வருகிறார்கள். விஜய்யும் லியோ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு இன்று காலை மீண்டும் தாய்லாந்துக்கு சென்று விட்டார்.

Also read: லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன தளபதி 68 படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்