பாரதிகண்ணம்மா சீரியலில் டம்மியான வெண்பா.. கடுப்பாகி எடுத்த அதிரடியான முடிவு!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் கதாநாயகி விட அதிகமாகப் பேசப்படும் கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமான வெண்பா. இதில் தொகுப்பாளினியான ஃபரினா தன்னுடைய கச்சிதமான நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது கூட இந்த சீரியலில் இருந்து விலகாமல் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் வெண்பா கதாபாத்திரம் தற்போது சீரியலில் டம்மியாக மாறிவிட்டது.

தொடக்கத்தில் கொடூரமான வில்லத்தனத்தை காண்பித்து சின்னத்திரை ரசிகர்களை மிரள விட்டுக்கொண்டிருந்த வெண்பா தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் சைடு கேரக்டர் போலவே மாறிவிட்டார். இதனால் மீண்டும் பழைய வெண்பாவை எப்போது பார்க்கப் போகிறோம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிர்ச்சியான செய்தி ஒன்று சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு வேளை ஃபரினா பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்ற சந்தேகத்தை கிளப்பும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே ஃபரினா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி என்ற சீரியலில் நடித்து கலர்ஸ் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான். எனவே அதைத் தொடர்ந்து தற்போது அபி டெய்லர் சீரியலிலும் நடிக்கப் போகிறாரா என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். அப்படியென்றால் பாரதிகண்ணம்மா சீரியலிலிருந்து ஃபரினா விடை பெற உள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

எனவே ரசிகர்களின் இந்த கேள்விக்கு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஃபரினா விரைவில் விடை அளிப்பார் என்று சின்னத்திரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வெண்பா இல்லையென்றால் அந்த சீரியல் படு மொக்கையா ஆகிவிடும் என்பது இயக்குனருக்கு தெரியாதா இல்லையா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்