புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாறனுக்காக உண்மையை கண்டுபிடித்து மாமனாரிடம் நிரூபித்த வீரா.. தோற்றுப் போய் நிற்கும் கண்மணி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் இருந்து ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், மாறன் வலுக்கட்டாயமாக வீரா கழுத்தில் தாலி கட்டினாலும் தன் அக்காவின் கல்யாண வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் வந்து விடக்கூடாது. அத்துடன் ராமச்சந்திரன் குடும்பத்திற்கும் எந்தவித களங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக வீரா, மாறனை ஏற்றுக் கொண்டதாக ஒரு டிராமாவை போட்டு மாமனார் வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கண்மணி, மாறனையும் ராமச்சந்திரன் குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் கண்மணிக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டது. இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் மாறனுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கண்மணி ஒவ்வொரு பிளானாக போட்டு வருகிறார்.

அதன்படி மாறன் குடித்துவிட்டு பிரச்சினை பண்ணுவது போல் ஒரு பிளான் பண்ணி ராமச்சந்திரனை நம்ப வைத்து விடுகிறார். அந்த வகையில் மாறன் குடித்த தண்ணீரில் மயக்க மருந்து போட்டு அவர் குடிகாரர் போல செட் பண்ணி அங்க பக்கத்தில் இருக்கும் கடையில் பிரச்சினை பண்ணி கடையை உடைத்து விட்டதாக பணம் கொடுத்து கடை ஆட்களையும் நடிக்க வைத்து விட்டார்.

இதனால் ராமச்சந்திரன் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டும் விதமாக மாறனை பார்த்து நீ எல்லாம் திருந்தவே மாட்டியா? உன்னை நம்பி வேற வீரா வந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாள் என வாய்க்கு வந்தபடி திட்டு விடுகிறார். ஆனால் மாறன் எந்த தப்பும் பண்ணவில்லை என்று வீராவிடம் உறுதியாக சொல்லிவிட்டார். பிறகு வீரா, மாறன் இவ்வளவு தூரம் நம்மிடம் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பி உண்மையை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்.

அந்த வகையில் ராமச்சந்திரனிடம் பொய்யாக சொன்ன ஒவ்வொருவரையும் பார்த்து பேசி உண்மையை கண்டுபிடித்து விடுகிறார். பிறகு அந்த ஆட்களை எல்லாம் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ராமச்சந்திரன் இடம் நடந்த உண்மையை சொல்ல சொல்கிறார். அப்பொழுது அந்த ஆட்கள் எல்லாம் உங்க பையன் மாறன் எந்த தவறுமே பண்ணவில்லை.

இதெல்லாம் பண்ண சொல்லி எங்களுக்கு ஒரு லெட்டர் மற்றும் அதனுடன் சேர்ந்து பணமும் வந்தது. அதனால் தான் நாங்கள் அனைவரும் சேர்ந்து மாறனுக்கு எதிராக பொய் சொல்லி விட்டோம் என ராமச்சந்திரிடம் உண்மையை சொல்லி விடுகிறார்கள். பிறகு தான் மாறன் மீது எந்த தவறும் இல்லை. அவன் குடிக்கவும் இல்லை, எந்த பிரச்சினையும் பண்ணவில்லை என்று ராமச்சந்திரனுக்கு புரிந்திருக்கிறது.

கண்மணி இந்த மாதிரி ஒரு வேலையை செய்து மாறனை இப்படி பழிவாங்க நினைக்கிறார் என்பது வீராவுக்கு தற்போது புரிந்து விட்டது. தான் எடுத்த முயற்சியில் மிகப் பெரிய தோல்வி அடைந்து விட்டோம் என கண்மணி கோபத்தில் இருக்கிறார். இப்படி மாறனுக்கு எந்தவித பிரச்சனையும், ராமச்சந்திரன் குடும்பத்திற்கு கலங்கமும் வராதபடி பாதுகாப்பாக வீரா பார்த்து வருகிறார்.

அதே மாதிரி மாறனும், வீரா மற்றும் அவருடைய குடும்பத்திற்கும் எந்த பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக நின்னு உதவி பண்ணுகிறார். அப்படித்தான் வீராவின் தங்கை பப்பில் ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்ட பொழுது மாறன் சரியாக அந்த நேரத்தில் போயி வீராவின் தங்கையை காப்பாற்றி விடுகிறார். இதனை தொடர்ந்து மாறனை முழுமையாக வீரா புரிந்து கொண்டு மாறன் எந்தவித தவறும் செய்யவில்லை என்ற உண்மையும் தெரிந்து கொண்டு ஒற்றுமையாக வாழ போகிறார்.

- Advertisement -

Trending News