வில்லனாக சக்கர கவுண்டர் மிரட்டிய 5 படங்கள்.. மறக்க முடியாத விஜய்-வேதநாயகம் காம்போ

தமிழில் சின்ன கவுண்டர் படத்தில் சக்கர கவுண்டர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சலீம் கௌஸ். இவர் சமீபத்தில் காலமானாலும், இன்றும் அவர் நடிப்பில் மிரட்டி விட்ட 5 படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சின்ன கவுண்டர்: ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக சலீம் கௌஸ், சக்கர கவுண்டர் என்ற கதாபாத்திரத்தில் படுமோசமான வில்லனாக நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றியால் இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் குவிந்தது.

Also Read: விஜய் நடித்த வேட்டைக்காரன் பட டைரக்டரின் தற்போதைய நிலைமை.. இது ரொம்ப கொடுமை

திருடா திருடா: 1993 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய தயாரித்த இந்தப் படத்தில் ஆனந்த், பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் வில்லனாக சலீம் கௌஸ் நடித்திருப்பார். இந்த படம் திருட்டுத் தொழிலில் ஈடுபடும் பெரிய கும்பலுக்கும் அந்தக் கூட்டத்தில் இருக்கும் கதாநாயகர்களின் தோழிக்கு ஏற்படும் பிரச்சனையும், அதை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இதில் திருடர்களின் தலைவராக சலீம் கௌஸ் நடித்து மிரட்டி இருப்பார்.

சீமான்: 1994 ஆம் ஆண்டு கார்த்தி சுகன்யா நடிப்பில் வெளியான சீமான் படத்தில் வில்லனாக சலீம் கௌஸ் தன்னுடைய கொடூர வில்லத்தனத்தை காட்டியிருப்பார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு பலரையும் வியக்க வைப்பதுடன் மிரட்டியும் இருக்கும்.

Also Read: காணாமல் போன 5 வில்லன் நடிகர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சொர்ணாக்கா

ரெட்: சிங்கம்புலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான இந்த படத்தில் செல்லூர் சீனி என்ற வில்லன் கேரக்டரில் சலீம் கௌஸ் மிரட்டி விட்டு இருப்பார். இந்த படத்தில் பார்ப்போர்கள் அனைவரும் சலீம் குலசை திட்டி தீர்க்கும் வகையில் தன்னுடைய படும் மோசமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

வேட்டைக்காரன்: சலீம் கௌஸ் தமிழில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் இணைந்த காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. இதில் ‘வேதநாயகம்னா பயம்’ என தளபதிக்கு பயம் காட்டிய வில்லனாக நடித்திருப்பார். இதனால் கோலிவுட்டில் ரசிகர்களிடம் வேதநாயகம் என சட்டென்று இவரது முகம் நினைவிற்கு தோன்றிவிடும்.

Also Read: 2022-ல் திடீரென்று மரணித்த 5 சினிமா பிரபலங்கள்.. காலத்தால் மறக்க முடியாத படங்களை தந்த பிரதாப் போத்தன் மறைவு

இவ்வாறு இந்த 5 படங்களிலும் தன்னுடைய கொடூர வில்லத்தனத்தை காண்பித்து புகழ் பெற்றார். இவர் தன்னுடைய 70 ஆம் வயதில் கடந்த ஆண்டு மாரடிப்பு காரணத்தால் உயிரிழந்தாலும் இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்.

- Advertisement -