நாக்கை துருத்தி, வேட்டியை மடித்து கட்டி, இரும்பு ராடுடன் வந்த கேப்டன்.. பின்னங்கால் பிடரியில் பட ஓடிய வாட்டாள்

Vijayakanth’s Angry: சொக்கத்தங்கமாய் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விஜயகாந்த் இன்று மரணித்துள்ளார். இந்த துயர நாளில் அவர் பற்றிய பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டு வருகிறோம். அதில் கேப்டனின் தைரியத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு சம்பவத்தை பற்றி பார்ப்போம்.

அதாவது பாரதிராஜா இயக்கத்தில் கேப்டன் நடித்த தமிழ்ச்செல்வன் படம் கர்நாடகாவில் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் காவிரி பிரச்சனை தொடர்பாக விஜயகாந்த் கருத்து வெளியிட்டிருந்தார். இதனால் வாட்டாள் நாகராஜ் ஒரு கும்பலுடன் இணைந்து படகுழுவினர் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸ் முன்பு கோஷம் போட்டு இருக்கிறார்.

அதாவது தமிழ்ச்செல்வன் என்று தமிழ் பெயரில் கிளாப் போர்டு வைத்து ஷூட்டிங் நடத்தக்கூடாது என்று அவர் பிரச்சனை செய்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட விஜயகாந்த் உடனே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தன்னுடைய ஸ்டைலில் நாக்கை துருத்திக் கொண்டே கிளம்பி விட்டாராம்.

Also read: கண்ணீர் வெள்ளத்தில் தமிழகம், ஸ்தம்பித்த கோயம்பேடு.. மதுரை மைந்தன் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

காரில் இருந்த ஒரு இரும்பு ராடை எடுத்துக்கொண்டு அய்யனார் போல் வரும் விஜயகாந்தை பார்த்த வாட்டாள் பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடி இருக்கிறார். தனக்கே உரிய அந்த மதுரை பாஷையில் விஜயகாந்த் பேசிக்கொண்டு வருவதை பார்த்த கூட்டம் மொத்தமும் கலைந்து ஓடி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து விஜயகாந்த் படப்பிடிப்பை நடத்த சொல்லி இருக்கிறார். ஆனால் பாரதிராஜா தமிழில் கிளாப் போர்டு வேண்டாம் என கூறினாராம். உடனே கேப்டன் அப்படி மட்டும் நடந்தால் நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் பாரதிராஜா தமிழிலேயே கிளாப் போர்ட் வைத்து படத்தை ஆரம்பித்தாராம். இப்படி எதற்கும் அஞ்சாமல் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என இருப்பதுதான் கேப்டனின் ஸ்டைல். அதையே தான் அவர் அரசியலிலும் பின்பற்றினார். அப்படிப்பட்ட நல்ல மனிதரின் மறைவு அனைவரையும் கலங்கடித்துள்ளது.

Also read: சம்பளத்திற்கு கூட இவ்வளவு மட்டமா நடிக்க மாட்டேன்.. விஜயகாந்த் நடிக்க முடியாதுன்னு சொன்ன 5 கதாபாத்திரங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்