வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்

விஜய்யின் வாரிசு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்தது. அதேபோல் வினோத், அஜித் கூட்டணியில் உருவான படம் துணிவு. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாப் நடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியானால் நல்ல வசூலை பெறும்.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் கண்டிப்பாக வசூலில் பாதிப்பு ஏற்படும். ஆனால் துணிவு, வாரிசு இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்தது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் வெளியிட்டது.

Also Read : 25 படங்களில் தொடர் தோல்வி.. திறமை இருந்தும் ஜெயிக்க முடியாத வாரிசு நடிகரின் அதிரடி முடிவு

அதேபோல் வாரிசு படத்தை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் உதயநிதி தான் வெளியிட்டார். இந்நிலையில் ஒரு விநியோகஸ்தராக உதயநிதி தற்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அதுமட்டுமின்றி இங்கு வெளியாகும் பெரிய படங்களை அவர் தான் வெளியிட்டு வருகிறார்.

வாரிசு மற்றும் துணிவு படங்களில் எந்த படம் வெற்றி பெற்றது என்பதை ரெட் ஜெயிணட் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்று தந்துள்ளதாகவும், வாரிசு மற்றும் துணிவு இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட் என கூறியுள்ளார்கள். அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Also Read : விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

மேலும் இன்னும் பத்து நாட்கள் சென்றால் தான் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் விவரங்கள் முழுமையாக தெரியவரும். அதை வைத்து பார்க்கும் போது தான் எந்த படம் அதிக வசூல் செய்தது என்பது தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் துணிவு படம் அதிகமாக வசூல் செய்து வருவதாகவும், வெளிநாடுகளில் வாரிசு படம் அதிக வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இப்போது விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கி உள்ளனர். துணிவு தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : இணையத்தில் லீக்கான புகைப்படம்.. பதறிப்போய் கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு

- Advertisement -