வாரிசு படப்பிடிப்பில் லீக்கான வீடியோஸ்.. மீண்டும் ஹைதராபாத்துக்கு படையெடுக்கும் விஜய், வம்சி கூட்டணி

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக அளவில் வெளியாக இருக்கிறது.

அதனாலேயே இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. அத்துடன் வாரிசு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் அனைத்தும் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதைப் பார்த்த படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Also Read: ராஷ்மிகா உதடு வலிக்க கொஞ்சிய தளபதி விஜய்.. இணையத்தை ஆட்டிப்படைக்கும் ரஞ்சிதமே வீடியோ

ஆகையால் வாரிசு படத்தின் ஆக்சன் கலந்த எமோஷனல் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பை அடுத்த வாரம் ஹைதராபாத்தில் துவங்க படக்குழு விரிந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பின் போது வாரிசு படத்தில் பாக்கி வைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் படத்தை முழு வீச்சில்  எடுத்து முடிப்பதற்காக விஜயுடன் வம்சி கூட்டணி ஹைதராபாத் கிளம்புகிறது.

ஏற்கனவே வாரிசு படத்தின் நிறைய போட்டோக்கள் ரிலீஸ் ஆனதால் கதை அனைத்தையும் ரசிகர்கள் கணித்திருக்கலாம் என்ற பயத்தில், நிறைய காட்சிகளை மாற்றி அமைக்கவும் வாரிசு படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Also Read: விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!

அதிலும் விஜய் ஹெலிகாப்டரில் செல்வது போல் ஒரு காட்சி ரிலீஸ் ஆனதை வைத்து பீஸ்ட் பட கிளைமாக்ஸ் என்றும் சொல்லி வருகிறார்கள். மேலும் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இதையெல்லாம் மனதில் வைத்து இனியாவது வாரிசு படத்தின் எந்த புகைப்படமும் வெளி வராத அளவுக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் ஸ்ட்ரிட்டாக இருக்கப் போகிறார் வம்சி.

Also Read: ஆடியோ வெளியிட்டு தேதியை லாக் செய்த வாரிசு படக்குழு.. துணிவை வச்சு செய்யப்போகும் மேடை

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -