Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-rashmika-varisu

Videos | வீடியோக்கள்

ராஷ்மிகா உதடு வலிக்க கொஞ்சிய தளபதி விஜய்.. இணையத்தை ஆட்டிப்படைக்கும் ரஞ்சிதமே வீடியோ

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலக அளவில் வெளியாக இருக்கிறது. அதனாலேயே இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

அதாவது இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல கோடி ரூபாய்க்கு பிசினஸ் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த படமும் இந்த அளவுக்கு ஃப்ரீ ரிலீஸ் பிசினஸில் மாஸ் காட்டியதில்லை.

Also read:பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

இதனாலேயே வாரிசு திரைப்படம் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக பட குழு சில நாட்களுக்கு முன்பே ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் தெரிவித்து இருந்தது. அதனால் இன்று காலை முதலே இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார். ஏற்கனவே விஜய் குரலில் பல பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் இன்று வெளியாக இருக்கும் இந்த பாடல் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகும் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Also read:அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

மேலும் இந்தப் பாடல் வெளியாவது குறித்த ஒரு புது போஸ்டரையும் பட குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் இணைந்து இருக்கின்றனர். இப்படி சோசியல் மீடியா முழுவதிலும் பரபரப்பை கிளப்பி இருந்த அந்த பாடல் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

பார்க்கவே ரொம்பவும் கலர்ஃபுல்லாக வெளியாகி இருக்கும் அந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த பாடல் தான் சோசியல் மீடியாவை கலக்கும். அந்த அளவுக்கு குதூகலமாக வெளியாகி இருக்கும் இந்த பாடல் பார்ப்பவர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.

Continue Reading
To Top