போஸ்டர், ட்ரெய்லரை காட்டி ஏமாற்றிய வாரிசு.. மன உளைச்சல், மண்ணை கவ்விய ஓப்பனிங்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பேட்டி எல்லாம் கொடுத்தனர்.

அவை அனைத்தும் தற்போது வீணாகி போயிருக்கிறது. ஏனென்றால் வாரிசு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் சீரியல் போன்று இருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதை விஜய் ரசிகர்களே கூறுவது தான் பட குழுவினரை அதிர்வடைய வைத்திருக்கிறது. இதன் காரணமாக இப்போது படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

Also read: ஓவர் அலப்பறை கொடுத்த வாரிசு டீம்.. சைலண்டாக அடித்து நொறுக்கிய துணிவு

அந்த வகையில் இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வாரிசு மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் தற்போது படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் படம் நல்லா இல்லை தூங்கி விட்டோம் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் எந்த எதிர்பார்ப்போடும் இந்த படத்தை பார்க்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எதுவுமே இல்லை என்றும் ரஞ்சிதமே பாடல் தான் கொஞ்சம் ஆறுதல் தருகிறது என்றும் கூறுகின்றனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் சில ரசிகர்கள் கிளைமாக்ஸ் வருவதற்கு முன்பே தியேட்டரை விட்டு வெளிவந்தது தான் பரிதாபம்.

Also read: களை கட்டும் பொங்கல் ரிலீஸ்.. அசர வைக்கும் துணிவு முதல் நாள் வசூல்

இப்படி பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிந்து வருகிறது. ஆனாலும் குடும்ப ஆடியன்ஸுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்ற கருத்துக்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படி ஒரு விமர்சனத்தை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் என அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அது மட்டுமல்லாமல் படத்தின் வியாபாரமும் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படி பெரும் ஆவலை தூண்டிவிட்ட பட குழு தற்போது ஒட்டுமொத்தமாக ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது. இதனாலேயே படத்தை பார்த்த பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஓப்பனிங் நாளிலேயே வாரிசு திரைப்படம் மண்ணை கவ்வி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: சர்க்கரை பொங்கலாக இனிக்கும் துணிவு.. அஜித்தை கொண்டாடும் ஆடியன்ஸ், முக்கியமான 5 காரணங்கள்

- Advertisement -