கல்யாணத்துக்கு பின் ராசி இல்லாமல் போச்சு.. முதலிடத்தை பிடிக்க துடிக்கும் நயன்தாராவின் 75வது படம்

Nayanthara 75th Movie Update: என்னதான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டாலும் நயன்தாராவிற்கு கல்யாணத்திற்கு பிறகு ராசி இல்லாமல் போச்சோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு சமீப காலமாகவே பெரிய பட வாய்ப்பு எதுவும் அமையவில்லை. இருப்பினும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.

அந்தப் படத்தின் தொடர்ச்சியாக தன்னுடைய 75வது படத்தின் மூலம் தான், மீண்டும் தன்னை டாப் நடிகையாக நிலைநிறுத்த பார்க்கிறார். நயன்தாராவின் 75வது படத்தை சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் ராஜா ராணிக்கு பிறகு மறுபடியும் ஜெய் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

Also Read: நடிப்புக்கு குட் பை சொன்ன விஜய் பட ஹீரோயின்.. நயன்தாரா இவங்கள பார்த்து கத்துக்கோங்க

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஜெய் மற்றும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸிக்கு உரிய போஷன் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது. தற்போது நயன்தாரா இந்த படத்திற்கு தான் அதிக கவனம் செலுத்துகிறார்.

இந்த படத்தின் மூலம் மறுபடியும் தன்னுடைய முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார். அது மட்டுமல்ல மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக ரவுண்டு கட்டப் போகிறார். மேலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார். இதில் ஜெய்யும் நயன்தாராவும் இணைந்து ஒரே இடத்தில் வேலை பார்க்கின்றனர்.

Also Read: ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் முதல் 8 நடிகைகள்.. 40 வயதில் அம்மா நயனை பின்னுக்கு தள்ளிய திரிஷா

அவர்களுக்கிடையே மலரும் காதல் வழக்கமாக இல்லாமல் கொஞ்சம் புதுவிதமாக யோசித்து கதை அமைத்துள்ளனர். இந்த கதை திருச்சி மற்றும் சென்னையில் நடப்பது போல் படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவிற்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திற்காகவே இரண்டு செட் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு செட் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் கதையை கடந்த 2021 ஆம் ஆண்டே நயன்தாரா கேட்டு, அதில் நடிக்க ஒத்துக் கொண்டு விட்டார். இந்த படத்தின் முதல் ஷெட்யூல் 14 நாட்கள் நடந்து முடிந்து விட்டது. அதன் இரண்டாம் ஷெட்யூல் தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் என்ன என்பதும் தெரியவரும். எனவே அவர் பெரும் நம்பிக்கையுடன் இருக்கும் நயன்தாரா 75 படப்பிடிப்பு தற்போது வேகம் எடுத்திருக்கிறது.

Also Read: ஹீரோக்களை விட எந்த விதத்திலும் சலச்சவங்க இல்ல.. வரிஞ்சு கட்டி சம்பளத்தை உயர்த்தும் 5 நடிகைகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்