வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

10 வருஷத்துக்கு முன்னாடி தனுஷ், சமந்தா பல்லி மாதிரி தான் இருந்தாங்க.. கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி

தமிழ் சினிமாவிற்கு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், நெகட்டிவ் கேரக்டர்களிலும் மிரட்டினார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கும் வரலட்சுமி தமிழைக் காட்டிலும் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. எல்லா நடிகர் நடிகைகளையும் பத்து வருடத்திற்கு முன்பு பார்த்திருந்தால் பல்லி மாதிரி தான் இருந்திருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை மெருகேற்றி மேலும் சினிமாவில் வளர்ந்தனர்.

Also Read: நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்

எடுத்துக்காட்டாக கோலிவுட்டில் இருக்கும் டாப் நடிகர்களான சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் எல்லாம் முதல் படத்தில் ஏகப்பட்ட கேலி, கிண்டல்களுக்கு ஆளாகினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற விடா முயற்சியை கையில் பிடித்துக் கொண்டு முட்டி மோதி முன்னேறி உள்ளனர்.

அதிலும் தனுஷ் அற்புதமான திறமைசாலி. தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிக் கொண்டு தற்போது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கிறார். நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களின் ஆரம்ப காலகட்டத்தை பார்க்கும் போது பலருக்கும் வியப்பளிக்கும்.

Also Read: ஒரு இரவு, ஒரு வீடு, ஒரு உயிர் பலி.. வரலட்சுமி டபுள் மீனிங்கில் பீதியை கிளப்பும் கொன்றால் பாவம் ட்ரைலர்

அதிலும் சமந்தா சினிமாவை துவங்கிய போது அவர் இருந்த தோற்றத்திற்கும் தற்போது இருக்கும் தோற்றத்திற்கும் பெரிய அளவில் மாற்றம் இருக்கும். அவர்களின் வளர்ச்சி தான் அவர்களை மென்மேலும் அழகுப்படுத்தியது. அப்படித்தான் பல பிரபலங்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டுள்ளனர்.

அதிலும் கோலிவுட்டில் 10 வருடத்திற்கு முன் பல்லி போன்று இருந்த தனுஷ், சிம்பு, சமந்தாவின் வளர்ச்சி தன்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது என்று கில்லி மாதிரி சொல்லி அடிச்ச வரலட்சுமி பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகிறது.

Also Read: பாடி ஷேமிங், அதிரடியாக 18 கிலோ உடல் எடையைக் குறைத்த வரலட்சுமி.. தலைவர் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்கள்

- Advertisement -

Trending News