Videos | வீடியோக்கள்
ஒரு இரவு, ஒரு வீடு, ஒரு உயிர் பலி.. வரலட்சுமி டபுள் மீனிங்கில் பீதியை கிளப்பும் கொன்றால் பாவம் ட்ரைலர்
வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் என்றால் பாவம் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் இப்போது கொன்றால் பாவம் என்ற படத்தில் நடித்துள்ளார். பிரதாப் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மனோஜ் குமார் தயாரித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் மனோபாலா, ஈஸ்வரி ராவ், சார்லி போன்ற பிரபலங்களும் கொன்றால் பாவம் படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க திரில்லர் படமாக இந்த படத்தை எடுத்துள்ளனர். சந்தோஷ் பிரதாப் மீது கொலை வெறியில் இருக்கும் வரலட்சுமி அவரை கொல்வதற்காக பல முயற்சிகள் மேற்கொள்கிறார்.
Also Read : தமிழ் சினிமா வெறுத்து ஒதுக்கிய வரலட்சுமி.. அக்கட தேசத்தில் குவியும் பட வாய்ப்பால் எகுறிய சம்பளம்
மேலும் அவரைக் கொல்வதற்கான காரணம் என்ன என்பது பிளாஷ்பேக் காட்சிகளில் வரக்கூடும். பெரும்பாலும் இருளிலேயே இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதாவது படம் முழுக்க ஒரு இரவு, ஒரு வீட்டை வைத்து கதையை நகர்த்தியுள்ளார்கள். கடைசியில் நினைத்ததை வரலட்சுமி சாதித்தாரா என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.
மேலும் கொன்றால் பாவம் ட்ரெய்லரிலேயே பல டபுள் மீனிங் வசனங்களை வரலட்சுமி பேசியுள்ளார். கடைசியில் கொன்றால் பாவம் தின்னா போச்சு என்று வசனங்களையும் வரலட்சுமி அள்ளி தெளித்துள்ளார். படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது என்பது ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது.
Also Read : அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு மட்டும்தான் பொருந்தும்.. புது ரூட்டை பிடித்த வரலட்சுமி
கொன்றால் பாவம் வருகின்ற கோடை விடுமுறையை முன்னிட்டு மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய உள்ளது. மேலும் இப்படம் கன்னட மொழியில் வெளியான கார்ல ராத்திரி என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்துள்ளனர். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என வரலட்சுமி சரத்குமார் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
Also Read : உண்மை சம்பவத்தை கண் முன் நிறுத்திய IAS வரலட்சுமியின் V3.. முழு விமர்சனம்
