சரத்குமார் உடன் இருந்த பல வருட பகை.. காத்திருந்த அனகோண்டாவை பழிவாங்கிய வரலட்சுமி

Varalakshmi: கடந்த சில தினங்களாக எந்த பக்கம் திரும்பினாலும் வரலட்சுமி கல்யாண பேச்சு தான். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. யார் எப்படி வேணா பேசிட்டு போகட்டும் என நாட்டாமை குடும்பம் பயங்கர குஷியாக இந்த கல்யாணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

வரலட்சுமி ஆரம்ப காலகட்டத்தில் சரத்குமாரின் மகள் என்பதே பலருக்கும் தெரியாது. அவர் அதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் தயங்கினார். அப்பாவை வெறுத்து, \ பின்னர் அப்பாவின் செல்ல மகளாகவே மாறி இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய மகளின் சினிமா வாழ்க்கைக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை என்று சரத்குமாரே பல மேடைகளில் புலம்பி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் வரலட்சுமி சினிமாவுக்குள் வரும்போது அவர் விஷாலை காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. கிட்டத்தட்ட அப்பாவை எதிர்த்துக் கொண்டு கூட இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பேசப்பட்டது.

கடைசியில் இந்த காதல் முறிந்து போனது. பலருக்கும் இதன் காரணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு திடுக்கிடும் தகவலை சொல்லி இருக்கிறார். அதாவது சரத்குமார் மற்றும் விஷாலின் அப்பாவுக்கு 1990களின் சமயத்திலேயே கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது.

அனகோண்டாவை பழிவாங்கிய வரலட்சுமி

விஷாலின் அப்பா ஜிகே ரெட்டி முதன் முதலில் சரத்குமாரை வைத்து தான் ஐ லவ் இந்தியா என்னும் படத்தை தயாரித்தார். இந்த படம் பெரிய தோல்வி அடைந்தது. அதற்கு முழு காரணமும் சரத்குமார் என்றுதான் சொல்லப்படுகிறது.

அதன் பிறகு ஜிகே ரெட்டி சினிமாவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவருடைய மகன் அஜய் கிருஷ்ணா மூலம் சினிமாவில் ஜெயித்து விடலாம் என நினைத்தார். ஆனால் அஜய் கிருஷ்ணாவுக்கு பட வாய்ப்புகள் எதுவுமே இல்லை.

அதன் பிறகு தான் விஷால் சினிமாவை முழுமையாக கற்றுக் கொண்டு உள்ளே நுழைந்து நடிகர் சங்கம் வரை தன்னுடைய பழைய பகையை கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் இவர் வரலட்சுமி காதலித்து வந்தது சரத்குமாருக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என சரத்குமார் பலமுறை முயற்சி செய்திருக்கிறார். விஷால் பெண்கள் விஷயத்தில் மோசம் என்பதை அறிந்து கொண்ட சரத்குமார் அவருடைய ஆட்களை வைத்து ஒரு சில விஷயங்களை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்.

இதை வரலட்சுமி இடம் ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு தான் வரலட்சுமி விஷாலை வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். எங்கேயோ ஆரம்பித்த பகையை எங்கேயோ முடித்திருக்கிறார்கள் சரத்குமார், ஜிகே ரெட்டி.

Next Story

- Advertisement -