பிக்பாஸில் சம்பளத்துடன் ஹனிமூன் கொண்டாடும் ஜோடி.. கொளுத்திப்போட்ட வத்திக்குச்சி வனிதா

Vanitha Vijaykumar: நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கு மீடியாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததோடு, சீசனுக்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு சேனலில் தன்னுடைய வத்திக்குச்சி வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இந்த சீசன் அவருடைய மகள் ஜோவிகா கலந்து கொண்ட சீசன் என்பதால் ஓவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆரம்பத்தில் அவருடைய மகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. போகப் போக ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவது, சாப்பிடுவது, தூங்குவது, கீழே விழுவது என போர் அடிக்கும் வேலைகளை தான் செய்து வந்தார். ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுதே பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்கள் என்னை தாக்கி விட்டார்கள் என வனிதா மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் கமலஹாசன் எபிசோடு முடிந்த பிறகு வனிதா அது பற்றி பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் மற்றும் சாண்டி சேர்ந்து கொண்டேன் எனக்கு வத்திக்குச்சி என பெயர் வைத்தார்கள். கமல் கூட இரண்டு எபிசோடில் அந்தப் பெயரை சொல்லி என்னை கிண்டல் அடித்து இருக்கிறார்.

Also Read:பிரதீப்பிற்கு பின் மொத்தமாய் படுக்க இருந்த பிக்பாஸ்.. டிஆர்பியை தூக்கி நிறுத்தியது யாரு தெரியுமா?

அப்படி இருக்கும் பொழுது திடீரென பட்டப்பெயர் வைத்ததெல்லாம் கமல் பிரச்சனை ஆக்குவது சரியல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு பட்டப் பெயர் வைக்கப்பட்டு தான் இருக்கும். பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், சரவண விக்ரம் அது எல்லாம் சகித்துக் கொண்டு டைட்டிலுக்காக போராடுவதாக வனிதா சொல்லி இருக்கிறார்.

ஹனிமூன் கொண்டாடும் ஜோடி

மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மணி மற்றும் ரவீனா இருவரும் சம்பளத்துடன் வீட்டிற்குள் ஹனிமூன் கொண்டாடி வருவதாக வனிதா சொல்லி இருக்கிறார். யாருக்கு இது மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும். பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள். கல்யாணத்திற்கு முன்பே ஹனிமூன் கொண்டாடும் வாய்ப்பு இவர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே ரவீனா வீட்டை விட்டு வெளியேறி விட்டால் மணி தன்னுடைய கேமை நன்றாக விளையாடுவார் என்பது பிக் பாஸ் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது ரவீனா உடன் நட்பாக பழகி வந்திருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் வனிதா இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

Also Read:பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மறக்க முடியாத 6 ஃபேமிலி என்ட்ரிகள்.. ஒரே அறையில் ஃபேமஸான பிரதீப்

- Advertisement -spot_img

Trending News